தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கில் ஜாமீனில் உள்ள தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தவெக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை என்று தவெக தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளனர்.
இதில் மதியழகன் கரூர் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். தவெக கரூர் மத்திய நகரச் செயலாளர் மாசி பவுன்ராஜுக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பவுன்ராஜ் இன்று (ஏப்ரம் 4) அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தவெகவினர் பலர் இன்று அதிமுகவில் இணைந்தனர். அந்தவகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைதான தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில், "நம் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கிட, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையே சரியென ஏற்று, கரூர் மாவட்ட
தவெக-வை சேர்ந்த செயற்குழு உறுப்பினர் மாசி பவுன்ராஜ், நித்திஷ்,
கார்த்திகேயன், ரவீந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் தங்களை நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்." எனத் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் தவெகவுக்கும் - திமுகவுக்கும் இடையே தான் போட்டி என தொடர்ந்து பேசி வருகிறார் தவெக தலைவர் விஜய். இந்நிலையில் தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் தவெகவின் முக்கிய நிர்வாகி, அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்












Click it and Unblock the Notifications