பாஜகவின் நினைப்புக்கு மரண அடி விழுந்துள்ளது.. செந்தில் பாலாஜி ஜாமீனால் ஜோதிமணி உற்சாகம்!
சென்னை: அதிகாரம் இருந்தால் அந்த அதிகாரத்திற்கு எல்லோரும் பணிந்து விடுவார்கள் என்ற பாஜகவின் நினைப்புக்கு மரண அடி விழுந்துள்ளது, 15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி.
சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்றுவந்த நிலையில் இதற்கான தீர்ப்பு இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணை குற்றவாளியாக இருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து, திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறித்து கரூர் எம்.பி ஜோதிமணி பேசுகையில், "செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. 15 மாத கால சமரசமற்ற சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எவ்வளவோ தனிமை, துயரத்தை தாங்கி அசைக்க முடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு ஈடு இணை அற்ற இந்த வெற்றியை செந்தில் பாலாஜி பெற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அநீதியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு இந்தியா கூட்டணி தலைவர் கூட சமரசம் செய்து கொள்ளாமல் சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி பெற்று வெளியே வந்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.
அமலாக்கத்துறை தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்களை அநீதியான முறையில் கைது செய்து வந்துள்ளது. அதற்கு உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எதிர்ப்பையும் எதிர்க்கொண்டுள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி வழக்கில், பி.எம்.எல்.ஏ சட்டமே கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.
இனியாவது அமலாக்கத்துறை பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிற ஒரு அரசாங்க நிறுவனமாக நடந்து கொள்ளவேண்டும். அதிகாரம் இருந்தால் அந்த அதிகாரத்திற்கு எல்லோரும் பணிந்து விடுவார்கள் என பாஜகவின் நினைப்புக்கு இந்தியா கூட்டணி மரண அடி கொடுத்துள்ளது.
இந்த கடுமையான காலகட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அசைக்க முடியாத ஆதரவை செந்தில் பாலாஜிக்கு வழங்கி இருக்கிறார். அவருக்கும், அவருக்கு துணை நின்ற இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
-
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications