“உங்க பதட்டம்தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற சந்தேகத்தை வலுவாக்குது”.. அதிமுக பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் துயரச் சம்பவம் பற்றி விளக்கம் அளித்த நிலையில், அதிமுக அவரை கடுமையாக விமர்சித்துள்ளது. உங்கள் பதட்டம்தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது என அதிமுக தெரிவித்துள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில், ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகினர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Karur Stampede Row AIADMK Criticizes Senthil Balaji s Explanation Says It Deepens Doubts

கரூர் சம்பவம்

இந்தச் சம்பவத்தில் மின்சாரத்தை நிறுத்தி திமுகவினர் சதி செய்ததாகவும், கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி திட்டமிட்டு நெரிசலை ஏற்படுத்தியதாகவும் தவெகவினரும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

அதிமுக விமர்சனம்

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின் வாரிய அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ADGP ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர்,

டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார், பொம்மை முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், வருவாய்ச் செயலாளர், மருத்துவத் துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர், இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு...

இந்த பதட்டம் ஏன்?

இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க? எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? "அரசியல் செய்யாதீர்" "அரசியல் செய்யாதீர்" என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே?

உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.

செந்தில் பாலாஜி மீது விமர்சனம்

அப்புறம், அந்த பத்து ரூபாய்.... இந்தா வர்றோம்...

அஇஅதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.

ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன? Senthil Balaji Model Institutionalised Robbery- நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை!

தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை "Open-ஆகப் பேசுகிறேன்" என்று சொல்லி Justify செய்ய பத்து ரூபாய் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?

மடைமாற்றும் அரசியல்?

இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், "பத்து ரூபாய்" என்று எடப்பாடியார் அவர்கள் சொன்னாலே, "பாலாஜி" என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, Gross Negligence-ஐ மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?

ஏற்கனவே "காசு வாங்கினேன்... ஆனா திரும்ப கொடுத்தேன்" ன்னு சொல்லி தான் ED வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே.... இப்போ திரும்ப அதே Tone-ல பேசுறீங்களே... இந்த டைம் CBI வந்தா? Conditions-ah follow பண்ணுவீங்களா? (உபயம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி)" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+