புழல் சிறையில் தூக்கமின்றி தவித்த நடிகை கஸ்தூரி! குறைந்த அளவே உணவு சாப்பிட்டதாக தகவல்
சென்னை: சர்ச்சை பேச்சு தொடர்பாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந்த அளவே உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வன்கொடுமை சட்டம் போல பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். கஸ்தூரியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார். எனினும், இதற்கிடையே, கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைனைத்தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதற்கு மத்தியில் நடிகை கஸ்தூரி தலைமறைவு ஆனதால், அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு நடிகை கஸ்தூரி, ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கஸ்தூரியை கைது செய்தனர். சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கஸ்தூரிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்பட்டுள்ளார். கஸ்தூரி நேற்று இரவு சிறையில் தூக்கமின்றி அவதிப்பட்டதாக சொல்லபடுகிறது. நேற்று பிற்பகலில் கஸ்தூரியை சிறைக்கு கொண்டு சென்ற போது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது.
அதை அவர் சாப்பிடாமல் தவிர்த்து உள்ளார். இரவில் கலவை சாதம் வழங்கப்பட்டுள்ளது. அதை குறைந்த அளவு சாப்பிட்டுள்ளார். இன்று காலை பொங்கல், கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. அதனையும் குறைந்த அளவே சாப்பிட்டதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது சக கைதிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரி, ஏ 1 வகுப்பில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்க வாய்ப்புள்ளது. இதற்கு அவர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும். ஜெயிலில் முதல் நாள் என்பதால் நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சக கைதிகளுடன் ஒரே ஹாலில் வைக்கப்பட்டு இருந்த கஸ்தூரி இன்று வேறு அறைக்கு மாற்றப்பட்டு சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications