"என் ராசாவின் மனசிலே" படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எல்.கே. சுதீஷ்! ரகசியம் உடைத்த கஸ்தூரி ராஜா
சென்னை: நான் இயக்கிய "என் ராசாவின் மனசிலே" படத்தில் நடிக்க இருந்தவர் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்தான் நடிக்க இருந்தார் என இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
சகாப்தம், மதுர வீரன் ஆகிய இரு படங்களின் மூலம் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன். தற்போது படை தலைவன் என்ற பெயரில் புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் 23 ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கஸ்தூரி ராஜா, "பத்திரிகையாளர்கள் மனது வைத்தால்தான் படம் ஓடும்.
படைத் தலைவன் ஏங்க வைக்கும் தலைப்பு. விஜயகாந்தின் ரசிகர்களாக இல்லாதவர்கள் யாரும் இங்கு இல்லை. நானும் அவருடன் படம் செய்திருக்கிறேன். என் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகனாக முதலில் தேர்வானவர் தேமுதிக பொருளாளராக இருக்கும் சுதீஷ்தான். அது அவருக்கே தெரியாது.
கேமராமேன் நன்றாக உழைத்துள்ளார். சண்முக பாண்டியன் அப்படியே விஜயகாந்த் மாதிரி இருக்கிறார். வீரம் வெளஞ்ச மண்ணுக்கு பிறந்தவர், யானை கூட சர்வ சாதாரணமாக விளையாடுகிறார். சண்டை காட்சிகளில் கூட பயமின்றி நடித்தார்.

கேப்டன் போட்ட விதை! புரட்சித் தலைவருக்கு பிறகு யானையுடன் நடித்துள்ளார். படம் எப்படி வந்திருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். பல்வேறு சிக்கல்களை கடந்து படத்தை எடுத்துள்ளனர். பின்னணி இசையில் இளையராஜா பின்னியெடுத்திருக்கிறார் என கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி ராஜா ஒரு தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் ஆவார். அவர் செல்வராகவன், தனுஷின் தந்தை. இவர் விசுவுடன் 16-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். வீட்டை விட்டு வந்த இவர் சென்னையில் ஒரு ஆலையில் பணியாற்றினார்.
இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள், தனுஷ், செல்வராகவன், விமலா, கார்த்திகா ஆகியோர் ஆவர். இவர் என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே, கும்மி பாட்டு, துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications