சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவைவிட மிகப் பெரிய துன்பங்களிலிருந்து தப்பிய வரலாறு திருமணமான ஆண்களுக்கு உண்டு.. கஸ்தூரி கலாய்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும் அபாயம் திருமணமாகாதவர்களுக்கே உள்ளதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது குறித்து நடிகை கஸ்தூரி சங்கர் நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆரம்பத்தில் இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருக்கும் என கூறப்பட்டது.

கொரோனா வந்தால் மேற்கண்ட அறிகுறிகளுடன் சேர்த்து வாசனை தெரியாதது, நாக்கில் சுவை தெரியாதது உள்ளிட்டவை ஏற்படும் என ஓர் ஆய்வு தெரிவித்தது.

தரையில் அமரவைக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்... பொதுவாழ்வில் இருப்போருக்கு தலைகுனிவு.. ஸ்டாலின் வேதனை..!

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் திருமணமாகாதவர்களுக்கு கொரோனா வந்தால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

திருமணமாகாதவர்கள்

திருமணமாகாதவர்கள்

இதுகுறித்து கஸ்தூரி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கொரோனா வைரஸால் திருமணமாகாதவர்களுக்கு இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என ஆய்வு சொல்கிறது. அது சரிதான். திருமணமான ஆண்களுக்கு மிகப் பெரிய துன்பங்களிலிருந்து தப்பிய வரலாறு உண்டு என கஸ்தூரி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

இவரது இந்த கமெண்டுக்கு நிறைய பேர் பதில் அளித்துள்ளார்கள்.

ஆயிரம் இருந்தாலும் கொரோனாவுக்கு கபசுரக் குடிநீரும் டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் தான கொடுக்குறாங்க!!! அப்புறம் எதுக்கு நீட் தேர்வு.

முதல் வரி

முதல் வரி

நீங்க ரெண்டாவது வரி சொல்வதற்காக முதல் வரி உபயோகித்து இருக்கிறீர்கள்.
சரியா?

வாழ்நாள்

வாழ்நாள்

கஸ்தூரி அக்கா ஒரு வேளை நான் 4 முறை திருமணம் செய்து கொண்டால் என்னவாகும், 4 முறையும் என் வாழ்நாள் அதிகரிக்குமா என்ன என்கிறார் இந்த வலைஞர்.

English summary
Actress Kasthuri Sankar says that higher death risk for unmarried men from Covid 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X