பல ஆண்டுகளாக பாடுபடும் அரசியல்வாதிகள்! 30 வினாடிகளில் சாதித்த தீபிகா படுகோன்! பதான் குறித்து கஸ்தூரி
சென்னை: அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடும் நிலையில் நடிகை தீபிகா படுகோன் 30 நொடிகளில் செய்து விட்டார் என பதான் படத்தில் காவி உடை சர்ச்சை குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.
இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில் நடிகர் ஷாரூக் கான் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் பதான். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. 3 நிமிடங்கள் 15 நொடிகள் ஓடக் கூடிய இந்த பாடலை 4.9 கோடி பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.
இந்த படம் ஆரம்பமே ஆபாசமாகவே தொடங்குகிறது. வாழ்க்கை இன்று இரவு முழுமையாகிறது, என் இதயத்தை யாரோ கொள்ளை கொண்டு போய்விட்டார்கள் என்ற அர்த்தம் கொள்ளும்படியாக உள்ள இந்த காதல் பாட்டு படுகவர்ச்சியாக இருக்கிறது.

கவர்ச்சி
இந்த பாடல் முழுவதுமே தீபிகா படுகோன் கவர்ச்சியை ரொம்ப தாராளமாகவே காட்டியுள்ளார். ஆரம்பத்தில் மஞ்சள் நிறத்தில் டூ பீஸ் உடை அணிந்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெள்ளை, ஊதா, சந்தனம், சில்வர், வான நிற நீலம் உள்ளிட்ட வண்ண வண்ண டூ பிஸ் ஆடைகளை அணியும் தீபிகா இறுதியாக காவி நிறத்தை அணிந்துள்ளார். இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆபாசமான உடை
காவி நிறத்தை அணிந்து கொண்டு தீபிகா படுகோன் மிக மிக ஆபாசமான நடன அசைவுகளை ஆடுகிறார். ஷாரூக் கானும் மிக மிக நெருக்கமாக அன்யோன்யமாக நடித்துள்ளார். காவி நிறத்தில் தீபிகா ஆடுவது இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்துக்களின் புனித நிறம் காவி என தெரிந்தும் சித்தர்கள், மகான்கள், சாமியார்கள் அணியும் உடை காவி என தெரிந்தும் இது போன்றதொரு ஆபாச பாடலுக்கு இந்த நிறத்தில் உடையை பயன்படுத்துவது தவறு என சமூகவலைதளங்களில் பல அங்கலாய்க்கிறார்கள்.

மத்திய பிரதேச அமைச்சர்
இந்த பாடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது, இந்துக்களின் புனித நிறமான காவியை ஷாரூக்கான் கொச்சைப்படுத்திவிட்டார். இப்படி இந்துக்களை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் பதான் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகள்
இவ்வாறு பல தரப்பிலிருந்து பதான் பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நரோட்டம் மிஸ்ரா போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபட்டு வரும் நிலையில் நடிகை தீபிகா படுகோன் 30 விநாடிகளில் செய்துவிட்டார். அவர் காவி நிறத்தை இந்தியாவுக்கு பிடித்தமான நிறமாக மாற்றிவிட்டார் என கூறிய நடிகை கஸ்தூரி, தனது ட்வீட்டை தீபிகா, ஷாரூக் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கங்களுக்கு டேக் செய்துள்ளார். மேலும் #morepowertoyou என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளார்.

பத்மாவதி சர்ச்சை
தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான படம் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே பத்மாவதி திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. இந்த படத்தில் ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications