Kiruthiga: பிரபலம் யார்னு கேட்ட கிருத்திகா! இதெல்லாம் லிஸ்ட்லேயே இல்லைனு சொன்ன கஸ்தூரி! "வினோதம்"
சென்னை: பிரபலம் யார் என்பதை விளக்கி கிருத்திகா உதயநிதி போட்ட ட்வீட்டிற்கு கஸ்தூரி பதிலளித்துள்ளார். அவர் போட்டுள்ள விஷயம் மிகவும் புதுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பொதுவாக அவரது சினிமா குறித்த விஷயங்களையே ட்வீட் செய்வார். இதுவரை சினிமா அல்லாத ஒரு விஷயங்களை அவர் பதிவிட்டு நான் பார்த்ததே இல்லை.

ஆனால் பிரபலம் என்றால் என்ன என்பது குறித்து அவர் பதிவிட்டது வித்தியாசமாக இருக்கிறது. இது முரணாக இருக்கிறது என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கிருத்திகா உதயநிதி , "பிரபலம் யார், நீங்களும் உங்கள் மீதான மக்களின் பார்வைதான் நான் என நினைத்து உங்களின் சுயத்தை நீங்கள் இழக்கும் போது நீங்கள் கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என பதிவிட்டுள்ளார்.
கிருத்திகாவின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் விஜய் குறித்துதான் இப்படி மறைமுக பதிவை போட்டுள்ளார் என பலரும் விவாதித்து வருகிறார்கள்.
விஜய் கட்சி தொடங்கிய போது சில மாதங்கள் நன்றாகத்தான் போனது. ஆனால் இன்று தவெகவினரில் சிலரே விஜய் இப்படி செய்யலாமா என வருந்தும் அளவுக்கு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் அவர்களது உறவினர்களுடன் கடைசி வரை துணை நிற்காமல் விஜய்யும், அவரது நிர்வாகிகளும் சென்னைக்கு வந்துவிட்டனர். மேலும் அவர்களுக்கு ஆறுதலை சொல்லக் கூட நேரில் போகாத விஜய், அந்த குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் கரூர் சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என கூறினார். மேலும் சிபிஐ விசாரணைக்கு டெல்லி வரை விஜய் சென்றிருந்தார். இதன் பிறகு ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் முடங்கியது. அப்போது திமுகதான் காரணம் என விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த நேரம் பார்த்து சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாகவும், தன்னுடன் வாழ மறுப்பதாகவும், தன்னை பொருளாதார ரீதியில் துன்பம் கொடுப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கும் விஜய்க்கு ஆதரவாக நின்ற ரசிகர்கள், சங்கீதாவை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்பாத்தி குடும்ப விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் ஒரே நிற உடையில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கடுப்பான சங்கீதா, நேற்றைய தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், "என்னை விஜய் நீலாங்கரை வீட்டில் சேர்க்க மறுக்கிறார். நான் லண்டன் பிரஜை என்பதால் எனக்கு இந்தியாவில் சொந்த வீடு இல்லை. விவாகரத்து முடியும் வரை நான் நீலாங்கரை வீட்டில் இருக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் அவரது அந்தஸ்துக்கு இணையான ஒரு வீட்டில் என்னை தங்க வைக்க வேண்டும் என கோரியுள்ளார். மகளிர் தின விழா கொண்டாடிய விஜய்க்கு சங்கீதாவின் இந்த மனு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்











Click it and Unblock the Notifications