போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டது.. கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்.. விசாரணையில் ஷாக்!
சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள் அகற்றப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளானது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி இந்த பயங்கரமாக விபத்து ஏற்பட்டது. 75 கி.மீ வேகத்தில் வந்த ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே கிடந்தன.
இந்த விபத்தில் 19 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், ரயில்வே இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்தது. ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வருவதற்காக பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு, லூப் லைனில் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயலாக இருக்கலாம் என்று விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட்கள் மற்றும் நட்டுகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக விபத்துக்கு காரணமாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்திரி கூறுகையில், "பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது எந்தவொரு உபகரணங்கள், சிக்னல்கள் திடீர் செயலிழப்பு காரணமாக அல்ல, மாறாக தண்டவாளத்தை மாற்றி அமைத்ததுதான் என்பது தெரிய வந்துள்ளது. அதுவும் வலுக்கட்டாயமாக மாற்றியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது.
குறிப்பாக தண்டவாள இண்டர்லாக் அமைப்பின் கூறுகளை குற்றவாளிகள் வலுக்கட்டாயமாக அகற்றியதால் ஏற்பட்ட நாசவேலையின் விளைவாகும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த விபத்து நாசவேலை பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் பாக்மதி ரயிலின் லோகோ பைலட் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்துவதில் சிறந்த விழிப்புணர்வையும், உடனடித் தன்மையையும் காட்டினார். இது ரயிலின் வேகத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட மோதலின் தாக்கத்தையும் குறைத்தது' எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications