தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த, அரசு அனுமதியோடு, மும்பை, கொல்கத்தா போல விபச்சார விடுதிகள் இயங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கும்மிடிபூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காயல் அப்பாஸ், மும்பை, கொல்கத்தா போல தமிழகத்திலும் விபச்சார விடுதிகளை அனுமதித்தால் குற்றங்கள் குறையும் என்றும், முதலமைச்சர் ஜோசப் விஜய் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் தலைவர் காயல் அப்பாஸ் வைத்துள்ள கோரிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யபட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
மேலும் இந்தச் சபவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உயிரிழந்த சிறுமியின் குடும்பதாரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும்.
சிறுமி பாலியல் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து பிணையில் கூட விடாமல் சாகும்வரை சிறைபடுத்தினால் மட்டுமே இது போன்று, மிகவும் கொடூரமான முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.
எனவே கொல்கத்தாவில் சோனா காட்சி மற்றும் மும்பையில் கிரன் சாலை போன்ற இடங்களில் அந்த அந்த அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. அந்த மாநிலங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இது போன்று தமிழ்நாட்டில் முக்கிய மாநகரங்களில் விபச்சார விடுதிகள் அரசு அனுமதியோடு இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் இது போன்று பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
சிறுமிகள், பெண்களின் பாதுகாப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார் -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க












Click it and Unblock the Notifications