Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த 4 பேர்.." ஜெயலலிதாவுக்கு எதிராக போட்டியிட்டவர் அதிமுக வேட்பாளராம்.. விளாசிய கேசி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில், அதை முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

லோக்சபா தேர்தல் நமது நாட்டில் அடுத்த மாதம் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19இல் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

KC Palanisamy targets Edappadi Palanisamy and admk for poor candidate selection for lok Sabha election 2024

வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதிமுக சமீபத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதை கேசி பழனிசாமி சாடியுள்ளார்.

கேசி பழனிசாமி: அதிமுகவில் இருந்து இதற்கு முன்பு எம்பியாக இருந்தவர் கேசி பழனிசாமி. கடந்த 2018இல் இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறி அதிர்ச்சி தந்தவர். அவரது இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் அப்போது அதிமுக பாஜக கூட்டணி அமைத்தே பயணித்து வந்தது.

இதன் காரணமாகவே கடந்த 2018ல் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று கூறி வரும் கேபி பழனிசாமி, தொடர்ச்சியாக அதிமுக தலைமையை விமர்சித்து வருகிறது. இதற்கிடையே அதிமுக வேட்பாளர்கள் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ள கேபி பழனிசாமி அதிமுக வேட்பாளர் தேர்வைச் சாடியுள்ளார்.

கடும் தாக்கு: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "1) திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன் (சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவர், ஜெயலலிதா அம்மாவிற்கு எதிராக திமுக சார்பில் களம் கண்டவர்)... 2.) மதுரை டாக்டர் - P.சரவணன் ( திமுக -பாஜக - திமுக - அதிமுக என்று மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சி மாறி வந்தவர் )

3.) ஈரோடு - ஆற்றல் அசோக் குமார் ( சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர் பாஜக மொடக்குறிச்சி MLA-வின் மருமகன் பாஜக அதிமுக கூட்டணி இருக்கும் என்றும் பாஜகவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் என்று EPS-இடம் பேரம்பேசி MP சீட்டு உறுதியளிக்கப்பட்டதால் அதிமுகவில் இணைந்தவர் )

4.) திருச்சி - கருப்பையா ( மணல் மாபியா விவகாரத்தில் முக்கிய புள்ளியாக இருக்கும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் கரிகாலனின் சகோதரர் )

வேறு யாரும் இல்லையா: கட்சிக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள், வேட்பாளர் ஆக்கப்பட்டால் கட்சிக்கு வருகிறேன் என்று பேரம் பேசி வந்தவர்களை வேட்பாளராக்கினால் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்களா? சீட்டை உறுதிசெய்துகொண்டு கட்சிக்கு வருபவர்களால் கட்சிக்கு என்ன பலன்? அப்படி இவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர்களும் அல்ல. அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் கட்சிக்கு விசுவாசமானவர்கள் வேறு யாரும் இல்லையா?" என்று அவர் விமர்சித்துள்ளார்.

கேபி பழனிசாமியின் இந்த கருத்துக்கு இணையத்தில் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.. அதிமுக கூட்டணியைப் பொருத்தவரை இப்போது அங்கே தேமுதிக 5 சீட்களிலும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ தல ஒரு இடத்திலும் போட்டியிடுகிறார். இது தவிரப் புரட்சி பாரதம், தமிழ் மாநில முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மருத நாட்டு மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகள் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்ற போதிலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+