”பாத்துக்குறேன் உங்கள”ன்னு சொன்ன ஓபிஎஸ்.. இபிஎஸை நம்பினால் என்னஆகும்? நான் உதாரணம்.. கேசி பழனிசாமி
சென்னை: உங்கள பாத்துக்குறேன்னு என்று ஓபிஎஸ் சொன்னதாகவும், , எடப்பாடியை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு நானே உதாரணம் என்றும் கேசி பழனிசாமி பழைய நினைவுகளை பகிருந்துள்ளார். மேலும் நான் எப்படி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன் என்றும் கேசி பழனிசாமி கூறினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-என்னை நம்பியவர்களை கைவிட மாட்டேன். என்னை நம்பி யாரும் கெட்டதில்லை என்று சொல்லிவிட்டு இப்போது பாஜகவுடன் கூட்டணி வைப்பேன் என எடப்பாடி சொல்வதனால், மைனாரிட்டி வாக்குகள் எப்படி மாறும் என்பதற்கு பதில் அளித்த கேசி பழனிசாமி, அது அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவரை நம்பினால் கெட்டு போயிடலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

எடப்பாடி என்னை அழைத்தார்
ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், என்னை கட்சியை விட்டு தூக்கியதே ஒரு இதுதான். சசிகலாவின் இரட்டை இலை வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடக்கிறது. அதில் நான் சில மனுக்கள் போட்டிருந்தேன். தொண்டர்கள் மூலமாக தான் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மனு போட்டிருந்தேன். அந்த மனுவும் இரட்டை இலை வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக இருந்தது.
அப்போது எனக்கு எடப்பாடி பழனிசாமி போன் செய்தார். நீங்க இந்த வழக்கோடு போட்டீர்கள் என்றால், இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைப்பதில் இடையூறாக இருக்கும். முதலில் சின்னத்தை அதிமுக கட்சி பெறுவதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று ஒத்துழைப்பு கொடுத்தேன். தொடர்ந்து இரட்டை இலை கிடைத்தது. எல்லாமே நடந்தது.
நீதிமன்ற நடைமுறைகள் தெரிந்தஞ்சவங்களுக்கு தெரியும். எந்த வக்கீலாக இருந்தாலும் ஒரு கோர்ட் உத்தரவு வந்த உடனேயே மேல் நீதிமன்றத்தில் கேவியட் மனுவை போட்டு வைத்துவிடுவார்கள். இது ரொட்டின். சேஃப்டிக்காக அப்படி செய்வார்கள். அப்படித்தான் என் வக்கீலும் எனக்கே தெரியாமல் போட்டு இருந்தார். ஆனால் இதனை இரட்டை இலை வழக்குக்கு எதிராக நான் போட்டதாக நினைத்து எடப்பாடி பழனிசாமி என்னை செல்போனில் அழைத்தார்.
மோடி என்னை சிஎம் ஆக்குவதாக
இரட்டை இலை கொடுத்ததை எதிர்த்து நான் அப்பீல் செய்ததாக நினைத்து எனக்கு போன் செய்திருந்தார். தொடர்ந்து நான் நடந்ததை கூறினேன். கால சூழ்நிலைகள் இப்படி அமைந்துவிடுகிறது.
இதே மாதிரி தான் ஓ பன்னீர் செல்வம் என்னை மோடி ஆதரிக்கிறார். நான் தான் முதல்வர் என்றும், அதற்கு கீழே இணைப்புக்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறினார். நான் அவரோடு பேசி, மோடி ஆதரித்தால் அதை செய்யுங்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இப்போது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து இருக்கிறார். உங்களுக்கு பின்னாடி 11 பேர் தான் இருக்காங்க. ஆனால் அவர் பின்னாடி 120 பேர் இருக்கிறார்கள்.
எனவே இப்போது போய் முதலமைச்சரை மாத்துங்க என்று சொன்னால் நல்லா இருக்காது. முதலில் கட்சியில் இணையுங்கள். கட்சியை வலிமை படுத்துங்கள் என்று சொன்னேன். ஆனால் அவர் மோடி என்னை சிஎம் ஆக்கிவிடுவார் என்று சொன்னார். கட்சியில் இணைவதிலேயே பிரச்சினை செய்யாதீங்க. கட்சியில் சேருங்கள். இணைந்தால் தான் இதெல்லாம் நடக்கும். அதன் பிறகு நீங்கள் மோடியிடம் பேசி முதலமைச்சர் ஆவதற்கு வழியை பாருங்கள் என்றேன்.
என்னை ஏன் அவமானப்படுத்தனும்
அந்த நேரத்தில் என்னையும், செங்கோட்டையனையும் தலைமை கழகத்துக்கு அழைத்து, இது கால தாமதம் ஆகுது. சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். நிறைய பேர் தினகரன் பக்க போறாங்க.. சீக்கிரமா இந்த இணைப்பை முடியுங்கள் என்று என்னிடம் சொன்னார். அதன்படியே நானும் ஓபிஎஸ்ஸை அழைத்து இணைய வைத்தேன். என்னென்ன வேணும் என்று கேட்டார்.
இதையெல்லாம் செஞ்சு கொடுப்பேன் என்று சொல்லி அவரும் எல்லாமே செஞ்சார். ஆனால் ஓ பன்னீர் செல்வம் என்ன நினைத்தார் என்றால், இரண்டு பேருமே கவுண்டர் என்பதால், நான் எடப்பாடியை ஆதரித்து இரண்டு பேரும் சேர்ந்து தன்னை காலி செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டார். நினைத்தால் மட்டும் பரவாயில்லை. அம்மாவின் பிறந்தநாள் 2018 இல் அன்று தலைமைக் கழகத்தில் கூட்டம் நடக்கிறது.
அப்போது ஓபிஎஸ் தலைமைக் கழகத்தில் உள்ளவர்களை கூப்பிட்டு எனக்கான இருக்கையை, கடைசியில் தூக்கி போடு என்று சொன்னார். நான் ஓ பன்னீர் செல்வத்தை சிஎம் ஆக்காமல் விட்டுவிட்டேன் என்று நினைத்து எனது இருக்கையினை கடைசியில் போடுமாறு கூறினார். நான் எப்படி அவரை சிஎம் ஆக்க முடியும். உடனே முனுசாமியை கூப்பிட்டு சொன்னேன். உங்களுக்கு அழிவு வந்துவிட்டு. இவ்வளவு ஆணவம் ஆகாது. எதுக்கு என்னை ஏன் அவமானப்படுத்தனும் என்று நினைக்கிறீங்க.
உங்கள பாத்துக்குறேன்னு
உங்களுக்காக தோழ் கொடுத்தவங்க நாங்க. எங்களுக்கு நீங்க துரோகம் செய்றீங்க. இதனை தொடர்ந்து 2 மாதம் கழித்து தலைமை கழகத்தில் நமது அம்மா பத்திரிக்கை வெளியீடு விழா நடந்தது. அப்போது ஓபிஎஸ் எல்லாருக்கு பெயரை போட்டு சேர் போட்டனர். ஆனால் என் பெயரை வேண்டும் என்றே போடாமல் விட்டுவிட்டார். கோவை செல்வராஜ் இதை பார்த்துவிட்டு நீங்க உட்காருங்கன்னேன் என்று சொல்லிவிட்டு அவர் பின்னாடி போய் உட்கார்ந்தார். இவ்வளவு நல்ல மனசு கொண்டவராக ஓபிஎஸ் இருந்தார்.
பின்னர் கொஞ்ச நாள் கழிச்சி, என்னிடம் பேசிய ஓபிஎஸ், நீங்க அடிக்கடி எடப்பாடியை போய் பார்க்குறீங்க. இந்த தகவல் எனக்கு வருகிறது. இதில என்ன அண்ணேன் தப்பு இருக்கு என்று கேட்டேன். இல்ல நீங்க என்கிட்ட அதிகமாக வற்றதில்ல என்று சொன்னார். அவர் கூப்பிட்டார் அதனால் அங்கு சென்று அவரை பார்க்கிறேன். எளிமையாக அவரை பார்க்க முடிகிறது. ஆனால் நீங்க அப்படி இல்லை அண்ணேன்.. எதற்கு எடுத்தாலும் முனுசாமியை பார்த்தால் தான் உங்க கிட்ட வர முடியும். நீங்க முன்பு இருந்தது போல் இல்லை என்று சொன்னேன்.
உடனே என்னை பார்த்து, "உங்கள் நான் பாத்துக்குறேன்" என்று சொல்லிவிட்டார். இது உண்மை. அவரை இல்லையென்று சொல்ல சொல்லுங்க பார்க்கலாம். இதை மனதில் வைத்துக்கொண்டு என்னை நீக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் ஓபிஎஸ் சொல்லியிருக்கிறார். எடப்பாடி என்ன செய்திருக்க வேண்டும். நன்கு சிந்தித்து பார்த்து இருக்க வேண்டும். ஆனால் அவரும் எதுவுமே சொல்லாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். அறிவு இல்லாமல் ஓபிஎஸ் கொண்டு வந்து கொடுத்தார். நானும் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று என்னிடம் எடப்பாடி சொன்னார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications