எது போலாவரம் தெலுங்கானாவுல இருக்கா? விமர்சித்த அண்ணாமலைக்கு கேசிஆர் மகள் கவிதா கொடுத்த கவுன்ட்டர்!
சென்னை: உங்கள் ஆட்சியில் போலாவரம் திட்டத்தில் ஊழல் நடக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச, அவருக்கு சந்திர சேகர் ராவ் மகள் கவிதா கொடுத்த ரிப்ளை, வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தனியார் டிவி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரம், தெலுங்கானா எம்.எல்.சியும், முதல்வர் சந்திரசேகர ராவ் மகளுமான கவிதா ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற மூவரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்தனர். ஒவ்வொருவரும், தங்கள் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தனர்.

இந்த விவாதத்தில் பேசிய அண்ணாமலை, குடும்ப ஆட்சி பற்றி விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய கேசிஆர் மகள் கவிதா, நீங்கள் குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறீர்கள். உங்கள் கட்சியில் ஜோதிராவ் சிந்தியா குடும்ப ஆட்சி செய்யவில்லையா? நீங்கள் திமுகவை குடும்ப ஆட்சி என்று சொல்கிறீர்கள்.. அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்தபோது குடும்ப ஆட்சி என்று தெரியவில்லையா? மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருந்தபோது உத்தவ் தாக்கரே குடும்ப ஆட்சி என்று தெரியவில்லையா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியில் தெலுங்கானாவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்துப் பேசினார் கவிதா. அதனை விமர்சித்த அண்ணாமலை, "நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தெலுங்கானாவில் உங்கள் தந்தையார் ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்று கவிதாஜி பேசினார். கேசிஆரின் பத்தாண்டு கால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்றே உங்களால் டிஃபெண்ட் செய்ய முடியவில்லை. உதாரணமாக போலாவரம் திட்டத்தில் ஊழல் மலிந்திருக்கிறது. அது உங்கள் கட்சிக்கு, பணத்தை கொட்டும் ஏடிஎம் போல திகழ்கிறது." எனப் பேசினார்.

அதற்கு கவிதா, "போலாவரம் தெலுங்கானா மாநிலத்திலேயே இல்லை, ஆந்திராவில் இருக்கிறது" என பதில் அளித்தார். ஆந்திராவில் செயல்படுத்தப்படும் போலாவரம் திட்டத்தை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தெலுங்கானா முதல்வர் கேசிஆர் பற்றி விமர்சிக்கும் விதமாகப் பேசியதும், அதற்கு கவிதா கொடுத்த பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோது சந்திரபாபு நாயுடு, போலாவரம் அணை கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர் மாநிலம் பிரிந்து ஆந்திரா தனியான நிலையில், போலாவரம் அணை கட்ட நிதி ஒதுக்கினார். தொடர்ந்து, தற்போது ஜெகன் மோகன் ஆட்சியில் போலாவரம் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்ளோ தான் இது பவுசு…. பாக்க பயங்கரமா பாயின்டா பேசற மாதிரியே இருக்கும்…. செக் பண்ணி பாத்தா 😂😂😂 pic.twitter.com/ECVomYenZC
— MooknayakDr (@sathisshzdoc) October 13, 2023
போலாவரம் திட்டத்திற்காக மத்திய அரசு அறிவித்த நிதியை ஒதுக்க வேண்டும் என அண்மையில் கூட ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தினார். இந்நிலையில், போலாவரம் திட்டம் எந்த மாநிலத்தில் இருக்கிறது என்று கூட தெரியாமல் பேசி அண்ணாமலை அசிங்கப்பட்டுள்ளார் என விமர்சித்து பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications