பேய் இருக்கா.. இல்லையா.. திடீர் திடீர்னு ஆடறாங்க.. குதிக்கிறாங்க.. ஒரு திகில் பள்ளி!
சென்னை அருகே அரசு பள்ளி மாணவிகளின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: திடீர் திடீர்னு அந்த பொண்ணுங்க ஆடறாங்களாம், குதிக்கிறாங்களாம், கத்தறாங்களாம்.. என்று பீதியில் சொல்கிறார்கள் பள்ளி மாணவர்கள்!
ஸ்ரீபெரும்புதூர் கீரநல்லூர் அரசு பள்ளி பயிலும் மாணவிகள் சிலர் கடந்த சில தினங்களாக வகுப்பறைகளில் அவ்வபோது கூச்சலிட்டு தன்னிலை மறந்து ஆடிவருவதால், மாணவிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் பீதியடைந்துள்ளதை தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வியாழக்கிழமை வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், கீரநல்லூர் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இப்பள்ளியில் கீரநல்லூர், காந்தூர், பொடவூர், சேந்தமங்கலம், விட்டவிடாகை ஆகிய பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மொத்தம் 230 பேர் படித்து வருவதாக சொல்கிறார்கள்.

7-ம் வகுப்பு
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. அப்போது 7-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் திடீரென்று கத்தினார்கள். ஒருத்தர், ரெண்டு பேர் என்றால் பரவாயில்லையே. 15 மாணவிகள் தங்களையும் மறந்து கூச்சல் போட்டுள்ளார்கள். சிலர் திடீரென ஆட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கை கால்களை உதைத்தனர்
15 பேரும் தங்களது கை கால்களை உதைத்துக்கொண்டு கத்தியுள்ளனர். என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே மாணவிகள் இப்படி நடந்து கொண்டுள்ளனர். இதை பார்த்து பாடம் நடத்தி கொண்டிருந்த டீச்சர்களும், மாணவர்களும் மிரண்டு போய் நின்றனர். பிறகு அந்த மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து அவர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஏன் என்று தெரியவில்லை
ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல்லீவு. திங்கட்கிழமை வழக்கம்போல் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. அதே 7-ம் கிளாஸ்தான். இப்போ 2 மாணவிகள் அன்னைக்கு செய்ததை போன்று திரும்பவும் செய்தனர். எதற்காக கத்தினார்கள், ஏன் குதித்தார்கள், ஏன் கை, காலை உதைத்து கொண்டார்கள் என்றே தெரியவில்லையாம்.

பேய் பிடித்துவிட்டது?
அதனால் திரும்பவும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் மாணவிகளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் என்னன்னு பார்க்க சொன்னார் கிளாஸ் டீச்சர். இப்படி 7-ம் கிளாஸ் மாணவிகள் செய்த செயல், ஊர் முழுக்க பரவிவிட்டது. மாணவிகளுக்கு பேய் பிடித்துவிட்டது என்று ஊரெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதன் விளைவு, இப்போது அந்த மாணவிகளை ஸ்கூலுக்கு பெற்றோர் அனுப்பி வைக்காமல் உள்ளார்களாம்.

மனநல ஆலோசனை
மாணவிகள் இப்படி நடந்து கொண்டதால், எங்கே நம் பிள்ளைக்கும் பேய் பிடித்துவிடும் என்று மாணவர்களையும் பெற்றோர் ஸ்கூலுக்கு அனுப்பவில்லையாம். கடைசியில் அட்டென்டன்ஸ் குறைந்து விட்டது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஸ்கூல் முழுக்க பிள்ளைகளுக்கு பேய் பயம் வந்துள்ளதால், அந்த பேய் பயத்தை போக்க மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்க முடிவானது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications