கீழடி அகழாய்வு.. அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒன்றிய அரசுக்கு ஏன் தயக்கம்? தங்கம் தென்னரசு
சென்னை: 5,350 ஆண்டுகள் பழமையானவர்கள், தொழில்நுட்பம் கொண்டவர்கள், மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகளானது நடந்து வருகின்றன. தற்போது 10 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த 2023 ஆம் ஆண்டு, முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையானது மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்திருந்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையினை வழங்காதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. சமீபத்தில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கீழடி அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மத்திய கலாச்சாரத்துறை அரசு இது குறித்து விளக்கம் அளித்தது. இதில், தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வறிக்கையில் சில திருத்தங்கள் செய்யும்படி மட்டுமே கோரினோம் என்றும் தொல்லியல்துறை இயக்குநர் அறிவுறுத்திய திருத்தங்களை ஆய்வாளர் செய்யவில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது. மேலும் கீழடி அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் எழுவது ஒரு கற்பனைக் கதை.
இது இந்திய தொல்லியல் துறையை மோசமான கையில் சித்தரிக்கக் கூடிய நோக்கத்தை கொண்டுள்ளது. தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தில், ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு, உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?
மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என்று கூறியுள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications