சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வாட் ஏ டே".. வரலாறு படைக்க போகிறது.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட கணிப்பு.. குட் நியூஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவிலும், தென் தமிழகத்திலும் பெய்து வரும் மழையால் தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பி வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    7 மாவட்டங்களில் இன்று சூப்பரான கனமழை…வானிலை ஆய்வு மையம் தகவல்

    தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் கேரளா, தமிழ்நாடு (தெற்கு), கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாகவே தீவிர கனமழை பெய்து வருகிறது.

    பிக்பாஸ் இந்த வாரம் வெளியேற போட்டிப்போடும் இருவர்...டாப் 5 இடத்தில் உள்ளவர்கள் யார் விவரம் பிக்பாஸ் இந்த வாரம் வெளியேற போட்டிப்போடும் இருவர்...டாப் 5 இடத்தில் உள்ளவர்கள் யார் விவரம்

    19ம் தேதி வரை கேரளாவில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த 5 மாவட்டங்களில் கடும் மழை பொழிவு இருக்கும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    அதேபோல் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு கிராமங்கள், கடலோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு, எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை மொத்தமாக 7 பேர் பலியாகி உள்ளனர்.

    அணைகள்

    அணைகள்

    இன்னொரு பக்கம் இந்த கனமழை காரணமாக கேரளாவை ஒட்டி இருக்கும் தென் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது மட்டுமல்லாமல் இப்போதும் விடாமல் மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது. தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் மழையால் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    வாட் ஏ டே

    வாட் ஏ டே

    இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்வீட்டில், இன்று தென் தமிழகத்திற்கு சிறப்பான நாள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் இருக்கும் அணைகளுக்கு இது சிறப்பான நாள். மழை நாளை மதியத்தில் இருந்து குறையும். கேரளாவில் இடுக்கி அணை வேகமாக நிரப்பி முழுமை அடையும் நிலையில் இருக்கிறது.

    கேரளா

    கேரளா

    கேரளாவில் இருக்கும் இடுக்கி அணை தான் மிகப்பெரிய அணை. ஒரு கட்டத்தில் கனமழையால் இதன் நீர் வரத்து 1800 கன அடியில் இருந்து 65000 கன அடியாக உயர்ந்துள்ளது. இப்போது அணை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிரம்பிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இடுக்கி அணைக்கு உபரி நீர் வருவது என்பது புதிய வரலாற்று சம்பவமாக இருக்க போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    அணைகள்

    அணைகள்

    கேரளாவிலும், தென் தமிழ்நாட்டிலும் பெய்யும் மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால்தான் இடுக்கி அணை கூட உபரி நீர் பெறும் அளவிற்கு நிரம்பி வருகிறது. இது தென் தமிழகம், முல்லை பெரியார் அணை நீரை நம்பி இருக்கும் தமிழக பகுதிகள், இடுக்கியை ஒட்டி இருக்கும் பகுதிகளில் இந்த வருடத்திற்கான நீர் தேவையை பூரித்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kerala and South TN rain: What a day for southern dams in the state says Tamilnadu weatherman in his tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X