ஸ்டாலின் போட்டுத்தந்த "ரூட்டு".. கப்பென பிடித்துக்கொண்ட பினராயி.. மோடி வர நேரம் பார்த்து.. "சரவெடி"
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதே முடிவு ஒன்றை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துள்ளார்.
பாஜக ஆளாத மாநிலங்களில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளுநர், முதல்வர் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டிலும் ஆளுநர் ரவி - தமிழ்நாடு திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் எழும்ப தொடங்கி உள்ளது. ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், தமிழ்நாடு வரலாறுக்கு எதிராக அவர் சொல்லும் கருத்துக்கள் சில திமுகவை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளது.
ஆளுநர் ரவியை நேரடியாக எதிர்க்கும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன் நடத்தியது. கடந்த மே மாதம் ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த தனிப்பட்ட மாநாட்டை விரும்பவில்லை.

சட்டம்
இதையடுத்து தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதாவது ஆளுநரை இந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு முதல்வரை வேந்தராக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை. அதோடு ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசு மூலம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதே சட்டம்
இந்த நிலையில்தான் கேரளாவிலும் இதே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில சிபிஎம் கூட்டணி அரசு மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி கேரளா மாநில அரசு ஆளுநரின் அனுமதி இன்றி துணை வேந்தரை நியமனம் செய்ய முடியும். அதேபோல் முதல்வர்தான் அங்கு பல்கலைக்கழக வேந்தராக செயல்படுவார். கேரளா ஆளுநருக்கும் அம்மாநில அரசுக்கும் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இங்கே தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழ்நாடு வரலாறு பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

கேரளா
அதேபோல்தான் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கானும் அம்மாநில வரலாறு பற்றி கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பழைய கம்யூனிஸ்ட் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து இவர் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தற்போது ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தமிழ்நாடு அரசை பின்பற்றி சட்டம் நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவை தற்போது ஆளுநர் டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.

மசோதா
இதில் கவனிக்க வேண்டிய தமிழ்நாட்டில் திமுகவின் மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கேரளாவில் காங்கிரஸ் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து உள்ளது. மசோதாவை எதிர்த்து அங்கு காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை பிரதமர் மோடி கேரளா செல்கிறார். அவர் கொச்சி செல்ல உள்ளார். சரியாக அதே நாளில் கேரளா அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications