ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்!
மத்திய கிழக்கில் பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை உருவாகியிருந்த நேரத்தில், லெபனான் எல்லையில் உருவாகியுள்ள பதற்றம் சர்வதேச அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட புதிய போர்நிறுத்தத் திட்டத்தை ஹிஸ்புல்லா நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இஸ்ரேல்-லெபனான் மோதலை மீண்டும் தீவிரப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
லெபனான் - இஸ்ரேல் நாடுகளில் எல்லையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி, மீண்டும் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு, அமெரிக்கா முன்வைக்கப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த திட்டத்தை ஏற்க மறுப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு சான்றாக இன்று அதிகாலையில் இஸ்ரேல் மேற்கு பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் இந்த முடிவு, ஏற்கனவே பதற்றம் நிறைந்துள்ள மத்திய கிழக்கு பகுதியில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவின் நிராகரிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்தத் திட்டத்தை ஹெஸ்புல்லா அதிகாரப்பூர்வமாக நிராகரித்து, அதை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என அறிவித்துள்ளது. இதனிடையே வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் ஹெஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்ததால் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன.
அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய நாடுகள் பல மாதங்களாக மேற்கொண்டுவரும் மறைமுக பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம், மத்திய கிழக்கில் பரவி வரும் ராணுவ மோதல்களை கட்டுப்படுத்துவதாகும். ஆனால் தற்போது ஹெஸ்புல்லா தரப்பின் இந்த முடிவு, அந்த முயற்சிகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போர்நிறுத்த முயற்சிகள் கேள்விக்குறியாகியுள்ளன. டிரம்ப், ஹிஸ்புல்லாவுடன் பேசி தாக்குதல்களை நிறுத்த ஒப்புதல் பெற்றதாக கூறியிருந்த நிலையில், தற்போதைய தாக்குதல்கள் டிரம்ப்-ன் கருத்துக்கு முரணாக அமைந்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹெஸ்புல்லா மீண்டும் தாக்குதல் நடத்தினால் பெய்ரூட் மீது உடனடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் உடன் நிற்கும் ஈரான்
இதற்கு பதிலளித்துள்ள ஈரான், பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. ஈரானின் உயர்மட்ட ராணுவ கட்டளை அமைப்பான "காதம் அல்-அன்பியா"வும் இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பெய்ரூட்டில் தாக்குதல் திட்டம்
இதற்கிடையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள தாஹியே (Dahieh) பகுதியை குறிவைத்து நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெஸ்புல்லாவின் முக்கிய தளங்கள் அங்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியேறும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெய்ரூட் நகரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக மத்திய கிழக்கில் புதிய ராணுவ மோதல் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.
டிரம்ப்-நெதன்யாகு இடையே மோதல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் கடுமையாக எச்சரித்துள்ளார். லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், இஸ்ரேல் உலக அளவில் தனிமைப்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் அதிகப்படியான ராணுவ நடவடிக்கை, அமெரிக்காவின் அமைதி முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக டிரம்ப் கருதுகிறார்.
ஈரானின் எச்சரிக்கை
ஈரான், இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தினால், நேரடி பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது. ஈரானின் ராணுவ அதிகாரிகள், லெபனானில் ஏற்படும் மோதல் பிராந்திய அளவில் விரிவடையும் என்று தெரிவித்துள்ளனர். இது, அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications