Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா மாடல் பொருளாதாரம்.. பீகாரில் மூன்று மடங்கு கூலி உயர்வு.. பாஜக, நிதீஷ் ஜெயிக்க காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகாரில் மொத்தம் உள்ள 243 இடங்களில் 202 இடங்களைப் பெற்று, நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பீகார் தேர்தலில் ஏன் அசுர வெற்றியைப் பெற்றது என்று பலரும் குழம்பி போய் இருக்கிறார்கள். பல அரசியல் நிபுணர்கள், இந்தக் கூட்டணியில் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி மற்றும் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹெச்ஏஐ ஆகிய கட்சிகள் இணைந்ததைக் காரணமாகக் கூறுகிறார்கள். இது என்டிஏவின் வாக்குச் சதவீதத்தை முந்தைய மாநிலத் தேர்தலின் 37% இலிருந்து இந்த முறை சுமார் 47% ஆக உயர்த்த உதவி உள்ளது உண்மை தான். ஆனால் 10000 பணம் தான் காரணம் என்று கூறுவது முட்டாள்தனம் என்கிறார் ஒரு மூத்த அரசியல்வாதி,

பலர், நிதிஷ் குமார் பெண்களுக்கு மற்றும் பயனாளிகளுக்கு அளித்த இலவமே பாஜக கூட்டணியின் இந்த இமாலய வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். ஆனால், டெல்லியில் உள்ள மூத்த அரசியல்வாதி, ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஒரு மிகப்பெரிய அலை மாநிலத்தில் வீசும்போது இலவசங்கள் எல்லாம் வழங்குவது அர்த்தமற்றவை. ஆனாலும் ஆளும் கட்சிகள் அவற்றைப் பிடிவாதமாகத் தொடர்கின்றன. எனினும் கட்சிகள் நினைப்பது போல், இலவசங்களால் பெரும் வெற்றியை உருவாக்க முடியாது.

Kerala Model Economy What is the real situation in Bihar What is the reason for BJP s victory

வறுமையில் வாடும் பூமி

தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது நாங்கள் பேசிய பெரும்பாலான வாக்காளர்கள், நல்லாட்சியும் பொருளாதார வளர்ச்சியுமே நிதீஷை ஆதரித்ததற்கான முக்கியக் காரணங்கள் என்று கூறினார்கள். இருந்தும், பல பிரபல அரசியல் ஆய்வாளர்கள் இன்றும் பீகார் ஒரு தேங்கிக் கிடக்கும், நம்பிக்கை தளர்ந்து போன மிகவும் வறுமையில் வாடும் பூமி என்றே நினைக்கிறார்கள்.

வளர்ச்சி போய்விட்டது

இதுபற்றி ஒரு பிரபல செய்தியாளர் தனது ஊடகத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் , "நிதீஷ் குமார் 20 ஆண்டுகளாக ஒரு பொருளாதாரப் பேரழிவுக்கு பீகாரில் தலைமை தாங்கினார், ஆனாலும் அசுர வெற்றியுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ர். பீகார் ஏன் ஏழையாகவே இருக்கிறது, ஏனெனில் அங்கு அரசியல் நகர்வு அப்படியே இருப்பதால், மற்ற வளர்ச்சிகள் அனைத்தும் அப்படியே நிற்கின்றன" என்று கூறியிருக்கிறார்.

உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு

இந்தக் கட்டுரை அண்மையில் தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் இது முற்றிலும் அபத்தமானது. ஏனெனில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த 20 ஆண்டுகளில், பீகாரின் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம்10.2% ஆகும். இது அனைத்து பெரிய மாநிலங்களிலும், குஜராத்திற்கு (11.3%) அடுத்தபடியாக இந்த விகிதம் உள்ளது. நிதிஷின் 2020-25 ஆட்சிக்காலத்தின் ஜிடிபியை கவனித்தால் முதல் இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் முடங்கின. ஆனால் 2020-25 காலகட்டத்தில் ஜிடிபி சராசரியாக 9.2% இருந்தது, இது அகில இந்திய சராசரியை (7.7%) விட அதிகம் ஆகும்.

பீகார் ஏன் வறுமைக்கு தள்ளப்பட்டது

பீகார் மாநிலம் 2000 ஆம் ஆண்டில் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, பீகார் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து தொடங்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டது. இதுவே பீகாரின் வறுமைக்குக் காரணமாகும். ஜார்கண்ட் அனைத்துத் தொழில்களையும் (ஜாம்ஷெட்பூர்) மின்சாரத்தையும் எடுத்துக்கொண்டது. இதனால் பீகார் GDP-யில் வெறும் 4% தொழில்துறை பங்களிப்புடன், இந்தியாவில் மிகக் குறைவான நிலையில் கைவிடப்பட்டது. ஆனால் பீகார் இப்போது 21.5% ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் உள்கட்டமைப்பில் பலவீனம் காரணமாக, பீகார் இன்னும் பணக்கார மாநிலங்களை விடப் பின்தங்கியே இருக்கிறது.

எனினும் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. பக்ஸாரில் ஒரு புதிய 1300 மெகாவாட் மின் நிலையம் இப்போதுதான் இயக்கத்திற்கு வந்துள்ளது, மேலும் அதானி பவருடன் 2400 மெகாவாட் மின் நிலையத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

விளக்குகள் இல்லை

2005 ஆம் ஆண்டு பீகாரில் தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக நான் சென்றேன். அப்போது அங்குள்ள சம்பரன் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் கூட 50 மைல் தூரத்திற்கு எந்த மின் விளக்கும் தெரியவில்லை. இன்று, மின்சாரம் ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்து விட்டது. பீகாரில் இருபது ஆண்டுகளுக்கு முன், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை. இன்று அவை உண்மையிலேயே இருக்கின்றன.

மத்திய அரசின் முதலீடு

தற்போது மத்திய அரசின் முதலீடுகள் பீகார் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த உதவி உள்ளது. பீகாரன் தேசிய கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை இணைப்பு பெரிதும் மேம்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் முற்றிலும் கேள்விப்பட்டிராத இடங்களான பீகாரின் தர்பங்கா மற்றும் பூர்னியாவில் புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கிறது.

இடம் பெயர்வு பேரழிவு அல்ல

அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2.5 மில்லியன் பீகாரிகள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதை ஒரு பேரழிவாகப் பார்க்கின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்றும் நினைக்கின்றன. இது உண்மையிலேயே மடத்தனமானது. இடம்பெயர்வு ஆய்வுகள், ஏழையான, தொழிலாளர் உபரிப் பகுதியிலிருந்து பணக்கார, தொழிலாளர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்வது இரு இடங்களுக்கும் சிறந்தது என்பதை காட்டுகின்றன.

கூலி மூன்று மடங்கு உயர்வு

பொருளாதார நிபுணர் அலக் ஷர்மா இதுபற்றி கூறும் போது, வேலை தேடுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்வதன் காரணமாக, பீகாரின் கிராமப்புற கூலி இப்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆம் இப்போது மூன்று மடங்கு கூலி கொடுத்தால் வேலைக்கே பீகாரில் கிராமப்புறங்களில் வேலைக்கு ஆட்களே கிடைப்பார்கள்.

கேரளா மாடல் பொருளாதாரம்

பீகாரில் குறைந்தபட்சம் ஒரு புலம்பெயர்ந்தவரைக் கொண்ட குடும்பங்களின் பங்கு 1988-89 இல் 36% இலிருந்து 2017 இல் 65% ஆக உயர்ந்துள்ளது. ஏழைகள், குறுகிய காலத் தொழிலாளர்களாகச் செல்வது 72% இலிருந்து 20% ஆகச் சுருங்கி உள்ளது. இன்று பீகாரில் புலம்பெயர்பவர்களில் பெரும்பாலானோர் நிரந்தர வேலைகளைத் தேடுகிறார்கள். அப்படி சென்றவர்கள் ஆண்டுக்கு ₹25,000 கோடி வீட்டிற்கு அனுப்புகிறார்கள், இது வருமானத்தை உயர்த்துகிறது. ஏழை குடும்பங்களின் வருமானத்தில் இது பாதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் முன்பைவிட அந்தக் குடும்பங்கள் இரட்டிப்பு வருமானத்தைப் பெற்று வருகின்றன ஒரு காலத்தில் ஏழையாக இருந்த கேரளா, எப்படிப் புலம்பெயர்வு மூலம் செழித்தது என்பதற்குச் சிறந்த உதாரணம்." இவ்வாறு அந்த மூத்த அரசியல்வாதி கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+