நடிகைகள் ட்ரஸ் மாற்றும்போது.. கேமரா வைத்து ரசித்த படக்குழு? ராதிகாவிடம் புலனாய்வு குழு விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள திரைப்படங்களில் நடித்த போது கேரவனில் பெண்கள் உடைமாற்றுவதை படம் பிடிக்க ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை தான் பார்த்ததாக கூறியிருந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமாரிடம், கேரள சிறப்பு புலனாய்வு குழு, தொலைபேசியில் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள திரையுலகில் பாலியல் புகார்களை விசாரித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்த ஹேமா கமிட்டியால் பரபரப்பு எழுந்த நிலையில் அந்த அரசால் நியமிக்கப்பட்ட கேரள சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடிகை ராதிகாவிடம் தொலைபேசியில் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

hema committee report radhika sarathkumar kerala

அந்த விசாரணையில், "எந்த ஆண்டு எந்த படத்தில் நடித்த போது கேரவனில் கேமரா இருந்ததை பார்த்தீர்கள். கேமராவில் பதியப்பட்ட வீடியோவை எந்த நடிகர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால் எந்தெந்த நடிகைகள் பாதிக்கப்பட்டனர் போன்ற கேள்விகளை எல்லாம் அதிகாரிகள், ராதிகாவிடம் கேட்டதாக தெரிகிறது.

மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த அறிக்கை குறித்து ஒவ்வொரு துறையிலும் இருந்தும் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இதுகுறித்து பேசிய நடிகர் விஷால், பெண்களிடம் தவறாக நடக்க சென்றால் முதலில் செருப்பை எடுத்து அடிக்க வேண்டும் என்ற ஒரு பரபரப்பு கருத்தை பதிவு செய்தார். இதுகுறித்து ராதிகா சரத்குமார் பேசுகையில் நிறைய விஷயங்களை என் காலகட்டத்தில் இருந்து நான் பார்த்து கொண்டிருக்கிறேன். இது மலையாள திரையுலகில் மட்டுமில்லை. அனைத்து திரையுலகிலும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

மலையாளத்தில் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது படப்பிடிப்பில் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் அமர்ந்து போனை பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பார்த்து சிரிக்கிறார்கள் என தமிழ் தெரிந்த ஒருவரிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கேரவனில் நடிகைகள் உடை மாற்றுவதை ரகசியமாக கேமரா வைத்து படம் பிடித்து அதை அனைவரும் அமர்ந்து பார்க்கிறார்கள்.

எந்த நடிகை பெயர் சொன்னாலும் அவர்களிடம் அந்த வீடியோ இருக்கிறது என சொன்னார். இதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு எனக்கு தெரிந்த நடிகைகளுக்கு போனில் சொல்லி எச்சரிக்கை செய்தேன். கேரவன் இல்லாத காலகட்டத்தில் நாங்கள் 4 பேர் துணி பிடித்துக் கொண்டு மரத்திற்கு பின்னால்தான் உடையை மாற்றுவோம். அப்போதெல்லாம் யாரும் அப்படி இல்லை.

எனவே கேரவனில் ரகசிய கேமரா என்பதை கண்டறிந்ததும் தனியாக ஹோட்டலில் அறை எடுத்துதான் உடைகளை மாற்றி வருகிறேன். மேலும் எந்த கேரவனாக இருந்தாலும் என் உதவியாளர்களை வைத்து அங்கு ஏதாவது கேமரா இருக்கிறதா என உறுதி செய்துவிட்டுத்தான் செல்வேன் என ராதிகா தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+