அங்கம் குறித்து அவதாறு.. தப்பான எண்ணத்தோடு டச்! பகீர் கிளப்பிய ஹனிரோஸ்.. யார் இந்த பாபி செம்மனூர்?
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹனிரோஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனுரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். யார் இந்த பாபி செம்மனூர் என்பது குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். கேரளாவின் பிரபல தொழில் அதிபர் தான் பாபி என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத் திரை உலகில் இருந்து தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை தான் ஹனிரோஸ். 2005 ஆம் ஆண்டில் வெளியான பாய் பிரண்டு திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான அவர் திருவனந்தபுரம் லாட்ஜ் படத்தின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கும் கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் கனவே படத்தின் மூலம் தமிழில் தடம் பறித்த அவர் காந்தர்வன், சிங்கம் புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை ஹனிரோஸ்:
கடைசியாக இயக்குனர் சுந்தர் சி ஜோடியாக பட்டாம்பூச்சி படத்தில் நடித்திருந்த அவர் பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகு பக்கம் ஒதுங்கினார். அங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அம்மாவாக வீரசிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். அவரை விட வயது அதிகமான சுருதிஹாசன் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் அவரை விட வயது குறைந்த ஹனிரோஸ் தாயாக நடித்தது சமூக வலைதளங்களில் விவாதத்த பொருளானது குறிப்பிடத்தக்கது.
பாலியல் புகார்:
இந்த நிலையில் தான் தற்போது செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் அணி ரோஸின் பெயர் அடிக்கடி அடிபட்டு வருகிறது. தன்னைக் குறித்து வேண்டுமென்றே ஒரு நபர் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்தி வருவதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரது பெயரை ஹனிரோஸ் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவுகளில் கேரள தொழிலதிபர் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து வருவதாகவும் பாலியல் தொல்லை கொடுப்பதோடு தனது உடல் அமைப்பு குறித்து ஆபாசமாக பதிவிட்டதாகவும் தவறான எண்ணத்துடன் தன்னை தொட்டதாகவும் கூறியிருந்தார்.
தொழிலதிபர் மீது புகார்:
அவரது பதிவுக்கு பலர் ஆபாசமாக கருத்து தெரிவித்த நிலையில் தான் புகார் அளித்தார் ஹனி ரோஸ். பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் தான் அந்த பாலியல் தொல்லை கொடுத்த நபர் என கொச்சியில் நடிகர்கள் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஏற்கனவே மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பேசுபொருளாக இருக்கும் நிலையில் அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாபி செம்மனூர்:
இதற்கிடையே ஹனிரொஸ் புகார் குறித்து கொச்சி சென்ட்ரல் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. முதலில் கும்மாளம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாபி செம்மனூர் உள்ளிட்ட 27 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவையில் நடிகை ஹன்சிகாவுடன் புதிய நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் புறப்பட திட்டமிட்டு இருந்த நிலையில் பாபி செம்மனுரை வயநாட்டில் அவரது ரிசாட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் பரபரப்பு:
பாபி செம்மனூர் போச்சே என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடிகையை குறித்த கருத்துக்களுக்கு பாபி செம்மனூர் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள டிஜிபி இடமும் ஹனிரோஸ் புகார் அளித்த நிலையில் அவர்களது அறிவுறுத்தலின் பேரில் பாபிசெம்மனூர் கைது செய்யப்பட்டார் .செம்மனூர் குழுமத்தின் தலைவர் தான் பாபி செம்மனூர். இந்தியா முழுவதும் கிளைகள் பரப்பி இருக்கும் செம்மனூர் கோல்ட் மற்றும் பிற நிறுவனங்களில் தலைவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அறக்கட்டளைகளுக்கும் நிதி வழங்கிய பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications