பூந்தமல்லி ஹோட்டல் அறையில் படுக்கையில் நிர்வாணமாக கேரள இளைஞர் தற்கொலை.. அறைக்கு வந்த பெண் யார்?
சென்னை: பூந்தமல்லி அருகே ஓட்டல் அறையில் நிர்வாணமாக கேரள மாநிலத்து இளைஞர் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாஜின் (40), கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தவர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்தார்.
நேற்று முன்தினம் அறைக்குள் சென்றவர் இன்று வரை அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை தட்டியும் திறக்காததால் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஓட்டல் அறை
தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி நிர்வாணமாக சாஜின் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

யார் அந்த பெண்
விசாரணையில் கடைசியாக அவரது அறைக்கு ஒரு பெண் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் இவர் நிர்வாணமாக படுக்கையில் இறந்து இருப்பதால் தற்கொலை செய்து கொண்டாரா? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரச்சினையா
ஏதேனும் பெண்ணுடன் தவறான சகவாசம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு இறந்தாரா? இல்லை அந்த பெண் விலை மாதுவா என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பெண் யார் என்பது குறித்து ஹோட்டல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

தற்கொலை
நசரத்பேட்டை ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications