Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருவர் உள்ளே.. ஒருவர் அவுட்! பந்தாடப்பட்ட இலாகாக்கள்.. 2023ல் நடந்த அமைச்சரவை மாற்றங்கள் ஒரு ரீகேப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு அவரது அமைச்சரவையில் முதல் முறையாக இந்த ஆண்டில் ஒருவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Key changes in tamilnadu cabinet in this year 2023

இதுவரை அமைச்சரவை மாற்றங்கள்: ராஜகண்ணப்பனுக்குப் பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. அப்போது பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டன.

முதல் முறையாக பதவி பறிப்பு: இந்த ஆண்டில் தான் முதல் முறையாக கேபினட்டில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டார். கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுதான் இந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கியமான அமைச்சரவை மாற்ற நடவடிக்கை.

புதிதாக உள்ளே வந்த ராஜா: புதிதாக அமைச்சராகப் பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே தொழிற்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், அவருக்கு ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல், தொல்லியல் துறை ஆகியவையும் ஒதுக்கப்பட்டன.

பிடிஆர் இலாகா பறிப்பு: நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு மாற்றப்பட்டார். தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மனோ தங்கராஜூக்கு, ஆவடி நாசர் பொறுப்பு வகித்த பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது. தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும், முதல்வரின் மருமகன் குறித்தும் பிடிஆர் பேசுவதாக இருந்தது. இது கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியது. அப்போது திமுக தலைமை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சில வாரங்களில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அவர் பொறுப்பு வகித்து வந்த நிதி துறையிலிருந்து மாற்றப்பட்டார்.

பதவி பறிப்புக்கு காரணம்: பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், ஆய்வுகள், கூட்டங்கள் என பரபரப்பாகவே செயல்பட்டு வந்தார். பால் வளத்துறையின் கீழ் வரும் ஆவினின் நிர்வாகத்தில் குளறுபடிகள், முறைகேடுகள் என புகார்கள் குவிந்தன. அதிமுக ஆட்சியில் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராகக் குறைந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. சில இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது பரபரபைக் கிளப்பியது.

மேலும், வேறு சில சர்ச்சைகளிலும் ஆவடி நாசர் பெயர் அடிபட்டது. திமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிடச் சென்றபோது, அமர்வதற்கு சேர் எடுத்து வராததால் அமைச்சர் ஆவடி நாசர் ஒருவரை கல்லைக் கொண்டு எறிந்த வீடியோ வைரல் ஆனது. மேலும், அமைச்சர் நாசரின் மகனும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆசிம் ராஜா உள்ளாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் கிளம்பின, இந்த பின்னணியிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

செந்தில் பாலாஜி: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தது உள்ளிட்ட வழக்கில் சிக்கி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், அவர் அமைச்சராகவே தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத் துறையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை, அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்குவதுடன், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவெடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பினார். ஆனால், ஆளுநர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை ஏற்கவில்லை.

இலாகா இல்லாத அமைச்சர்: அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கு அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் எனக் கூறி அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டது. ஆனால், அமைச்சரவை நீக்க, ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி உறுதியாக நின்றார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து, இன்றளவும் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார் செந்தில் பாலாஜி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+