'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் ரீ-ரிலீஸ்! படம் புரியனும்னா இதை தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: ஹாலிவுட் திரைப்படமான 'இன்டர்ஸ்டெல்லார்' 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இது அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த திரைப்படத்தை இயக்கியது கிறிஸ்டோபர் நோலன். இவரின் படங்களை ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்தால்தான் புரியும். எனவே 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு முன்னர் சில விஷயங்களை தெரிந்துக்கொண்டால் படத்தை ஈஸியாக புரிந்துக்கொள்ளலாம்.

திரைப்படம் தொடங்கும் இடம்:
உலகம் முழுவதும் ஒரு வகை தாவர நோய் பரவி பயிர்களை முற்றிலுமாக அழித்துவிடுகிறது. குறிப்பாக நெல், கரும்பு என மக்காச்சோளத்தை தவிர அனைத்தும் அழிந்து போகிறது. நோயை உருவாக்கும் பாக்டீரியா நைட்ரஜன் மூலமாக அதிகமாக பரவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர். நமது பூமியில் 78% நைட்ரஜன் இருப்பதால், இந்த பாக்டீரியாவை அழிக்க முடியவில்லை. எனவே மொத்த மக்களும் மக்காச்சோளம் விளைச்சலை நம்பிதான் இருக்கிறார்கள். இதுதான் படத்தின் தொடக்க புள்ளி.
நாசாவுக்கு போகும் ஹீரோ:
இவர்கள் வீட்டில் மகள் 'மார்ப்' ரூமில், அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அடிக்கடி தானாக கீழே விழுகின்றன. அதேபோல, அந்த ரூமில் தூசியும் அதிகமாக படிகிறது.
இதை மகள் மார்ப் பேய் என்று கூறுகிறார். ஆனால் ஹீரோவான தந்தை, ஈர்ப்பு விசை ஒழுங்கிண்மை காரணமாகத்தான் இது நடக்கிறது என்று புரிய வைக்கிறார். ஆனால் அடுத்த நாள், மார்ப் ரூமில் படிந்த தூசியில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. இதை பார்த்த அவள், அப்பாவை கூப்பிட்டு காட்டுகிறாள். அது ஒரு மேப், அட்சரேகை, தீர்கரேகையை குறிக்கும் மேப். அது எந்த இடத்தை குறிக்கிறது? என்பதை தெரிந்துக்கொள்ள மகளும், அப்பாவும் கிளம்புகிறார்கள். இவர்கள் போய் சேரும் இடம்தான் நாசாவின் ரகசிய ஆய்வுக்கூடம்.
விண்வெளி பயணம்:
உலகமே சோத்துக்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விண்வெளி ஆய்வுகளுக்கு எதற்கு பணம்? என பொதுமக்கள் கொந்தளித்ததால், நாசா தனது ஆய்வை ரசகியமாக நடத்தி வருகிறது. இந்த ஆய்வு கூடத்திற்குதான் ஹீரோவும், மகள் மார்ப் இருவரும் வந்து சேர்கிறார்கள்.
ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஹீரோவை அழைத்து, "இங்க பாருப்பா, உலகத்துல இனிமே மனுஷங்களால வாழ முடியாது. எனவே நாங்க வேறு ஒரு உலகத்தை கண்டுபிடிக்க முடிவு செஞ்சோம். அதற்காக ஆய்வு செஞ்சு, பூமி மாதிரியே இருக்கக்கூடிய கிரகங்களை அடையாளம் கண்டு, அங்கு மனுஷங்களால வாழ முடியுமா? என்பதை தெரிந்துக்கொள்ள விண்வெளி வீரர்களையும் அனுப்பி வைத்தோம்.
அவர்களிடமிருந்து சில பாசிட்டிவ் தகவல்கள் வந்திருக்கிறது. அங்கு போய் நீங்கள் பார்த்துவிட்டு வர வேண்டும். உங்க கூட ரெண்டு மூனு பேரு வருவாங்க" என சொல்லி அவரை விண்வெளிக்கும் அனுப்பி வைத்தார். இது மகள் மார்ப்-க்கு பிடிக்கவில்லை. அப்பா போக கூடாது என அழுகிறாள். ஆனால் அழுகையால் ஹீரோவின் பயணத்தை தடுக்க முடியவில்லை.
டைம் டிராவல்:
விண்வெளிக்கு சென்ற ஹீரோ டீம், சனி கிரகம் பக்கத்தில் ஒரு வாரம்ஹோல் (wormhole) இருப்பதை கண்டுபிடிக்கிறது. அந்த வழியாக வேறு ஒரு இணை பிரபஞ்சத்திற்கு செல்கிறார்கள். நாம் வாழும் பூமி, சூரியக்குடும்பம் போல வேறு ஒரு இடத்தில் இருக்கும் பிரபஞ்சம்தான் இணை பிரபஞ்சம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல 'வாரம்ஹோல்' குறித்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் வாரம் ஹோல் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் பயணித்து 3 கிரகங்கைளை ஆய்வு செய்கிறார்கள். அதில் 2 கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. மூன்றாவதாக உள்ள கிரகத்திற்கு போக வேண்டும். ஆனால் இதற்கிடையில் இந்த டீமின் ராக்கெட் பழுதாகிவிடுகிறது. எனவே போதுமான எரிபொருள் இல்லை.
ஆனால் ஒரே ஒரு வழி மட்டும் இருக்கிறது. 'கரகன்சுவா' (Gargantua) எனும் 'பிளாக் ஹோல்' (black hole) ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, அங்கிருந்து மூன்றாவதாக இருக்கும் கிரகத்திற்கு போக முடியும். ஆனால் ராக்கெட்டின் எடையை குறைக்க வேண்டும். எனவே ஹீரோ சிறிய ராக்கெட்டை எடுத்துக்கொண்டு தனியாக சென்றுவிடுகிறார். டீமின் மற்றவர்கள் மூன்றாவது கிரத்திற்கு செல்கிறார்கள்.
'பிளாக் ஹோல்':
தனியாக வந்த ஹீரோ 'பிளாக் ஹோலில்' விழுகிறார். உண்மையில் இதில் மாட்டினால் தப்பிக்க முடியாது. ஆனால் ஹீரோ தப்பித்து வருவதாக திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
இங்கு ஹீரோ சந்திக்கும் விஷயங்கள் பார்வையாளர்களை குழப்பலாம். அதாவது ஹீரோ ஐந்தாவது பரிமாணத்திற்கு (5th Dimension) செல்கிறார். அங்கிருந்து அவரது மகளை ஈர்ப்பு விசை மூலம் தொடர்புகொள்ள நினைக்கிறார். இதனால்தான் மார்ப் ரூமில் புத்தகங்கள் தானாக விழும் பிரச்சனை ஏற்படுகிறது.
ஆக ஹீரோவை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது, யார்? என்பது இந்த திரைப்படத்தின் பிரதான கேள்வியாக இருக்கிறது. அவர்களை 'THEY' என குறிப்பிடுகிறார்கள். இவர்கள் 5வது பரிணாமத்தில் வாழ்வதாக சொல்லப்படுகிறது. இவர்களார் நேரத்தையும் கட்டுப்படுத்த முடியுமாம். இவர்கள் மனிதர்கள்தான் என்று சிலர் கூறுகிறார்கள். 'THEY' என்பது நாம்தான் என கிறிஸ்டோபர் நோலன் கூறுகிறார். எதிர்காலத்தில் நம்மால் நேரத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று திரைப்படத்தின் மூலம் அவர் கூறியிருக்கிறார். இதுதான் படத்தின் கரு.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications