குஷ்பூ பாஜகவில் இணைவது மகிழ்ச்சியே... எங்கிருந்தாலும் வாழ்க - அமைச்சர் ஜெயக்குமார்
குஷ்பு பாஜகவில் இணைவது மகிழ்ச்சிதான் அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியே, குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியான நிலையில் குஷ்புவின் ராஜினாமா கடிதம் அதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகியது பெரிய நஷ்டம் எதுவும் ஏற்படாது என்று மாநில காங்கிரஸ் கட்சியினர் கருத்து கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த குஷ்பு கடந்த சில மாதங்களாக ரொம்பவே மென்மையாக கருத்துக்களை பதிவிட்டார். புதிய கல்வி கொள்கை தொடங்கி பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து கூறுவது வரைக்கும் ட்விட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் கட்சியினரினரிடம் வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இந்த நிலையில் இதுநாள் வரை மனக்குமுறலில் இருந்த குஷ்பு இப்போது தீர்க்கமான முடிவு எடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணையவுள்ளார். இதற்காகவே தனது கணவர் சுந்தர். சி உடன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் குஷ்பு.
குஷ்பு பாஜகவில் இணையப்போவது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியே, குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமிதான் அவரை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications