பிச்சை எடுப்பதில் குஷ்புவுக்கு ஆர்வம்.. விரைவில் அவருக்கு அந்த நிலை வரும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கு
சென்னை: "பிச்சை எடுப்பதில் குஷ்பு ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு அந்த நிலைமை வரும்." என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து திமுக அரசைக் கண்டித்து கடந்த 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய குஷ்பு, " தமிழ்நாட்டில் 3,500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திமுக ஆள் தானே? இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா?" எனப் பேசினார்.
குஷ்புவின் இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "பிரதமர் மோடி, ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழ்நாட்டு மக்களை மயக்கி, அவர்களிடம் வாக்குகளை பெற்று தமிழகத்தில் பாஜகவுக்கு டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சியில் பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறார்.
நாட்டு மக்கள் தன்னுடைய குடும்பம் என்று சொல்லக்கூடிய பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன். முடிந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் உங்களை நாங்கள் பிரதமராக ஏற்றுக்கொள்கிறோம். சிஏஏ சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எறிவோம்.
பொய், பித்தலாட்டத்தின் மொத்த உருவமே மோடி தான். போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்றால், குஜராத்தில், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. " எனத் தெரிவித்தார்.
குஷ்புவின் பேச்சு பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், "மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று குஷ்பு சொல்கிறார். பிச்சை எடுப்பதில் குஷ்பு ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு அந்த நிலைமை வரும்." என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications