மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல்
சென்னை: ''மாஸ் வைத்து கொண்டு ஜெயிக்க முடியாதுங்க. அண்ணாமலை இவ்வளவு மாஸ் வைத்து கொண்டு அவரது சீட்டில் ஜெயித்து இருக்கலாமே. பாஜகவில் அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என்று நான் கூறமாட்டேன்'' எனக்கூறி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சீண்டி உள்ளார் நடிகை குஷ்பு. இது அண்ணாமலை ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சீண்டும் வகையில் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பாஜகவில் குஷ்பு துணை தலைவராக உள்ளார்.

இந்நிலையில் தான் செய்தி நிறுவனத்துக்கு குஷ்பு பேட்டி ஒன்றை வழங்கினார். அந்த பேட்டியில் குஷ்புவிடம், ''பாஜகவை பொறுத்தவரை வாக்கு சதவீதம் அண்ணாமலை வந்த பிறகு அதிகரித்துள்ளது என்ற பார்வை உள்ளது. நயினார் நாகேந்திரன் வந்த பிறகு அவரது அணுகுமுறை வேறு விதமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. அண்ணாமலையின் பெயரை சொல்லும்போது அதிக சத்தம் வருகிறதே?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாது
அதற்கு குஷ்பு, ''மாஸ் வைத்து கொண்டு ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலை இவ்வளவு மாஸ் வைத்து கொண்டு அவரது சீட்டில் ஜெயித்து இருக்கலாம். நான் சொல்வது கட்சி ஜெயிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யார் ஜெயிக்கிறாங்களோ, இல்லையோ, கட்சி ஜெயிக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்.
அண்ணாமலைக்கு பின் - முன் என்பது இல்லை
அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் பாஜகவுக்கு அஸ்திவாரம் வைத்தது இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தான். 5 ஆண்டுகளாக நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கியது என்று சொன்னாலும் கூட தமிழிசை சவுந்தரராஜன் கட்சிக்காக உழைத்தார்கள். மக்கள் அவரை கேலி செய்தார்கள். ஆனால் அவர் கட்சிக்காக நிற்கிறேன். கட்சிக்காக உழைக்கிறேன் என்று நின்று இறங்கி வேலை செய்தார்கள்.
தமிழிசைக்கு பின் - முன்
தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின், தமிழிசை சவுந்தராஜனுக்கு பின் என்று வேண்டுமானால் கூறலாம். அதை தான் நான் சொல்வேன். அண்ணாமலை 3 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் அரசியலுக்கு என்று எப்போது வந்தார்? இப்போது தானே வந்தார். ஸ்டாலின் 42 ஆண்டுகளுக்கு பிறகு தான் தலைவராக வந்தார். அதுவரை அவர் இளைஞரணியில் மட்டும் தான் இருந்தார். திமுகவை பொறுத்தவரை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என்று தான் பார்த்து வருகிறோம்.
அஸ்திவாரம் யார் வைத்தது?
என்னை பொறுத்தவரை பாஜகவில் இருந்த தலைவர்கள் அனைவரும் மாபெரும் தலைவர்கள். ஜெயித்து இருக்கீர்களா? இல்லையா? என்பது கிடையாது. அஸ்திவாரம் வைத்தது யார்? என்று பார்த்தால் பாஜக என்று கட்சி இருப்பது கூட தெரியாத நிலையில் இல கணேசன், எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், வானதி இருந்தாலும் கட்சிக்காக உழைத்தவர். இன்று நயினார் தலைவராக இருக்கிறார். அவர் தனது பாணியில் வேலை செய்கிறார். அண்ணாமலை வேறு பாணியில் வேலை செய்தார். நயினார் சீசன் அரசியல்வாதி. அவரது அப்ரோஜ் வேறு விதமாக உள்ளது.
சட்டம் தெரிந்தவர் அண்ணாமலை
ஆனால் அண்ணாமலை நன்றாக பேசக்கூடியவர். அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வந்தவர். எங்கு பேச வேண்டும்? எவ்வளவு பேச வேண்டும்? என்ற மீட்டர் அவருக்கு தெரியும். சட்டம் தெரியும். அதனால் அவர் எளிதாக மக்களிடம் கருத்துகளை கொண்டு போய் சேர்க்கிறார். ஆனால் அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என்று கூறினால் அதனை நிச்சயமாக ஏற்கமாட்டேன்'' என்றார்.
-
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications