ஆளே இல்லாத கடையில் யாருக்கு அய்யா டீ ஆத்துறீங்க.. எப்பவுமே நடிப்புதானா?.. மோடியை வாரும் குஷ்பு
Recommended Video

சென்னை: ஒரு பாலத்தின் மீது மோடி நடப்பது போன்ற வீடியோவில் பாலத்தின் கீழே யாருமே இல்லாத நிலையிலும் மோடி மக்களை பார்த்து கையசைப்பது போன்ற வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலாய்த்துள்ளார்.
ஒரு பாலத்தின் திறப்பு விழாவையடுத்து அந்த பாலத்தின் மீது மோடி நடந்து செல்லும் வீடியோ காட்சிகளை குஷ்பு வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் டுவிட்டர் கூறுகையில் என்ன மோடிஜி, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பெருங்கூட்டத்தை பார்த்து கையசைக்கிறீர்களா.
|
டிராலி, கேமரா
ஆளே இல்லாத கடையில் யாருக்கு அய்யா டீ ஆத்தறீங்க. இதுபோல் எத்தனை சுயவிளம்பரங்களை நீங்கள் செய்ய போகிறீர்கள். மக்களே பாலத்தின் சுவற்றில் உள்ள கேமராவின் நிழலையும், டிராலியையும் பார்க்க மறக்காதீர்.
|
குஷ்பு
எப்போதும் நடித்துக் கொண்டே இருக்கிறார். பிரதமர் அவர்களே எப்போது நீங்கள் பிரதமர் பணியை உண்மையில் ஆற்றுவீர்கள்? என கேட்டுள்ளார் குஷ்பு. இதற்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டர்வாசி ஒருவர் கூறுகையில் ஆ குஷ்பு, இந்த படத்தில் உள்ள கூட்டத்தை பார்க்க கண்ணாடியை பயன்படுத்துங்கள் என கிண்டல் செய்து பாலத்தின் மீதிலிருந்து மோடி கூட்டத்தை பாரத்து கையசைக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.
|
பதிலடி
இதற்கும் குஷ்பு பதிலளித்துள்ளார். அதில் ஆவ்... உங்கள் நம்பிக்கையை நான் சிதைப்பதற்கு என்னை மன்னியுங்கள். நான் அனுப்பிய வீடியோவில் மோடி கையசைக்கும் போது ரயிலும் ரயில்வே டிராக்கும் இருக்கிறது. நீங்கள் அனுப்பிய படத்தில் ரயில்வே டிராக் இருக்கிறதா. கண்ணாடியை போட்டு கொண்டு நீங்கள் பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இடிக்கிறதே!
குஷ்பு சொல்வது நியாயம்தான். மோடி கையசைக்கும் வீடியோவில் இருக்கும் ரயில்வே டிராக் கூட்டம் இருக்கும் படத்தில் இல்லாதது ஏன். அப்படியே அங்கு ரயில்வே டிராக் இருந்திருந்தாலும் அவ்வளவு கூட்டம் அங்கு கூட வாய்ப்பில்லை. எனவே ஏதோ ஒன்று இடிக்கிறதே!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications