டிராக்டரில் ஏறி சிறுவன் செய்த காரியம்.. ஒரு நொடி அசந்து போன ஆனந்த் மகிந்திரா.. கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டரில் இருக்கும் சிறுவன் ஒருவன் என்ஜின் இயக்கும் போது எழும் சத்தத்தை போலவே மிமிக்ரி செய்து இருக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இதை தனக்கே உரிய பாணியில் ஆனந்த் மகிந்திரா ஜாலியாக கலாய்த்து பதிவிட்டு இருக்கிறார்.
நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. பெரும் தொழில் அதிபராக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக செயல்படக் கூடியவர். ஆனந்த் மகிந்திராவின் பதிவு எப்போதும் நெட்டிசன்களின் கவனத்தை பெறும். தான் கண்டு வியந்த விஷயங்கள், அபூர்வமான சம்பவங்கள், சுவாரசியமான தகவல்கள் என தனக்கு சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் தகவல்களை ஆனந்த் மகிந்திரா அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

இந்த பதிவுகளுக்கு ஆனந்த் மஹிந்திரா கொடுக்கும் சில கமெண்டுகளும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவும். அந்த வகையில், தான் தற்போது ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் வீடியோவும் அதற்கு ஆனந்த் மகிந்திரா கொடுத்த கமெண்டும் வைரலாக பரவி வருகிறது. கஷல் பிஷ்னோய் தப்லா என்ற நெட்டிசன் ஒருவரின் ட்விட்டை ஆனந்த் மகிந்திரா பதிவு செய்துள்ளார்.
வாயாலே ஒலி: அந்த பதிவில், சிறுவன் ஒருவன் டிராக்டர் ஒன்றில் ஏறி அதை இயக்குவதை போல பாவனை செய்கிறான். பிறகு டிராக்டர் இயங்கும் போது எப்படி சத்தம் எழுப்புமோ அதை அப்படியே தனது வாயால் ஒலி எழுப்பினான். அச்சு அசல் உண்மையாகவே ஒரு டிராக்டர் இயங்கினால் எப்படி சத்தம் வருமோ அதே சத்தம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே வந்தது.
Very cool. The kid has a tractor in his belly…( I only hope he wasn’t doing this because the engine wasn’t working! 🙂) pic.twitter.com/8AJpBCq5Ue
— anand mahindra (@anandmahindra) January 11, 2024
இந்த பதிவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா, அதற்கு நகைச்சுவை பாணியுடன் கமெண்ட்டையும் பதிவு செய்து இருந்தார். அந்த பதிவில் ஆனந்த் மகிந்திரா கூறுகையில், இந்த சிறுவனுக்கு தனது வயிற்று பகுதியில் டிராக்டர் இருக்கும் போல.. (டிராக்டர் என்ஜின் செயல்படாமல் இருப்பதால் இப்படி இந்த பையன் வாயாலே ஒலி எழுப்புகிறான் என நம்புகிறேன்) என ஜாலியாக பதிவிட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் கருத்து: ஆனந்த மகிந்திராவின் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இந்த பையன் ஒரு நாள் கண்டிப்பாக என்ஜினீயராக வருவான் என்று கூறியுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளி குவித்துள்ளது.
அதுபோல நெட்டிசன்கள் தங்களிடம் இருக்கும் டிராக்டர்கள் குறித்து பதிவிட்டு வருவதோடு.. மஹிந்திரா நிறுவனத்தின் டெஸ்ட் டிரைவில் இருக்கும் காரின் புகைப்படத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு நிறுத்தாமல் புதிதாக சந்தைக்கு வர இருக்கும் இந்த காரின் மாடல் நேம் என்ன அதன் சிறப்புகள் என்ன என்பது வரை கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications