கிறுகிறு கிளாம்பாக்கம்.. எல்லாமே சூப்பர்தான்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் "இதுவும்" தேவை.. ஆமால்ல
சென்னை: அதிநவீன வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் எவ்வித சிரமமுமின்றி பேருந்துகளை பயன்படுத்தும் வகையில் இன்னும் சில சேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பாக பயணிகளிடம் எழுந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வசதிகள்: பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டு இந்த பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டாலும், ஒருசில வசதிகளை கூடுதலாக செய்துதர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அந்தவகையில், தென் மாவட்டங்களிலிருந்து வரும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.. முக்கியமாக இந்த பஸ் ஸ்டாண்டில் முறையான தகவல்கள் இல்லை என்கிறார்கள்.. போதிய வழிகாட்டு பலகைககளும் இல்லையாம்.. பஸ்களை அடையாளம் காணமுடியவில்லை என்று பயணிகள் சொல்கிறார்கள்.
மாநகர பேருந்துகள்: மாநகர பேருந்து நிலையம் இருக்குமிடத்திலிருந்து, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதற்கே ஒரு கிலோ மீட்டர் தூரம் போக வேண்டியிருக்கிறதாம்.
அதேபோல, இணைப்பு பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை. இதன்காரணமாக, வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள், சென்னைக்கு செல்வதற்கும், சென்னையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கும் போதிய வாகன வசதிகள் இல்லாமல் அவதிக்கு ஆளாவதாக சொல்கிறார்கள். அதுவும், பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கம் பஸ் முனையம் முழு அளவில் செயல்படும்போது இந்த நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
தற்காலிக வசதி: கிளாம்பாக்கம் பஸ் முனையம் அருகே மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் இணைப்புகளை ஏற்படுத்தி வேண்டும்.. இதை செய்து முடிப்பதற்கு இன்னும் டைம் எடுக்கும் என்றாலும், தற்காலிக வசதி ஏதாவது செய்யப்பட வேண்டும். பயணிகள் அதிகமாக வரும் பகுதிகளிலிருந்து நிறைய பஸ்களை இயக்கப்பட வேண்டும்.. அதற்கான போக்குவரத்து இணைப்புகளையும் மேம்படுத்தினால் உதவியாக இருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்.
அதேபோல, ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு டிக்கெட்கள் எடுக்கும் வழக்கத்தைவிடுத்து, ஒருங்கிணைந்த பயண டிக்கெட் அமைப்புகளை ஏற்படுத்தினால் உபயோகமாக இருக்கும் என்கிறார்கள். பண்டிகை காலம் உள்ளிட்ட அதிக நெரிசல் காலத்திற்கான வாகன திட்டமிடுதல்களும் தேவையாக உள்ளது.
இணைப்பு சேவைகள்: கிளாம்பாக்கத்திற்கு இணைப்பு சேவைகளை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது என்றாலும், தனியாரும் வழங்கினால்தான் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசலை குறைக்க முடியும். சரக்கு வாகனங்கள் அனைத்துமே, பரனூர் டோல்கேட் செல்வதற்கு ஏதுவாக தனிச்சாலை அமைத்தால், ஜிஎஸ்டி ரோட்டில் வாசன நெரிசல் இன்னும் குறைய வாய்ப்பிருக்கும்.
ஜிஎஸ்டி ரோட்டிலிருந்து பூந்தமல்லி மற்றும் ஆந்திர சாலைகளுக்கு எளிதாக சென்று திரும்பி வர போதுமான பஸ்களை இயக்க வேண்டும். அதேபோல, வடசென்னை, மாதவரம், செங்குன்றம், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் மெட்ரோ பறக்கும் ரயில் சேவை இல்லாதவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு இயக்கப்பட வேண்டும்" என்பது உட்பட பல்வேறு வசதிகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.
மகிழ்ச்சி: நேற்றுகூட, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக்-இல்லா முனையமாக செயல்படுவது உட்பட, தினமும் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைப்பதுவரை, அதிரடி நடவடிக்கைகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்..
இது பொதுமக்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டு வருகிறது. அதேபோல, இன்ன பிற வசதிகளையும் கிளாம்பாக்கத்தில் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications