பெருங்களத்தூருக்கு "யோகம்".. ஜிஎஸ்டி ரோட்டுல பறக்கலாம்.. காரணமே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுதான்.. மாஸ்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எப்போது திறக்கப்படுகிறதோ தெரியவில்லை.. ஆனால், கிளாம்பாக்கத்துக்கு கூடிய சீக்கிரம் ரயில்வே ஸ்டேஷன் வரப்போகிறது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகிஉள்ளது.
2 மாதங்களுக்கு முன்பேயே திறக்கப்படவேண்டிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இன்னும் திறக்கப்படவில்லை.. இப்போதைக்கு திறக்கப்படும் சூழலும் இல்லை என்றே தெரிகிறது.. கட்டுமானப்பணிகள் மொத்ததும் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாரானபோதுதான், மழை நேரத்தில் பஸ் ஸ்டாண்டு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்துள்ளது.

அதாவது, தேசிய நெடுஞ்சாலையைவிட, இந்த பஸ் ஸ்டாண்டு, 2 அடி உயரத்துக்கு கீழே கட்டப்பட்டுள்ளது.. அதனால்தான், தேசிய நெடுஞ்சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர், இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து வந்து தேங்கி நின்றுவிடுகிறது. இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் வந்துவிடுகிறது.. இதற்கு பிறகுதான், கால்வாய் அமைக்கும் பணி துரிதமாக ஆரம்பமாகி உள்ளது..
சிஎம்டிஏ என்ன சொல்கிறது: சிஎம்டிஏ உறுப்பினர்கள் இதுகுறித்து சொல்லும்போது, "மழைநீர் வடிகால் அமைப்பதில் முதல் கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆனால், ஜிஎஸ்டி சாலையின் குறுக்காக கால்வாய் அமைக்க வேண்டும்.. இந்த பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்" என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்த பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில், எந்த ரயில்வே ஸ்டேஷன்களும் இல்லை.. சென்னையின் நாலாபுற பக்கங்களிலிருந்தும் பயணிகள், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வரவேண்டுமானால், வருவோர், பஸ், ஆட்டோ, அல்லது கேப்களில்தான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேரவேண்டியதிருக்கும். ஏற்கனவே ஜிஎஸ்டி ரோட்டில், டிராபிக் ஜாம் நெருக்கி தள்ளும் நிலையில், இந்த நிலைமை வந்துவிட்டால், இன்னும் டிராபிக் அதிகமாகிவிடும்.
வாகன ஓட்டிகள்: இப்போதே வாகன ஓட்டிகள் சிக்கி திணறிதான் நெரிசலில் சென்று கொண்டிருக்கிறார்கள். இனி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வருபவர்களும்சரி, வெளியூரில் இருந்து இறங்கும் பயணிகளும் சரி, மொத்தமாக வந்துசேரும்போது நெரிசல் விழிபிதுங்கிவிடும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக அந்த பகுதியில் ரயில் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையையும் தெற்கு ரயில்வே நன்கு உணர்ந்திருக்கிறது.. இப்படி ஒரு பிளான் நீண்ட காலமாகவே தெற்கு ரயில்வேவுக்கு இருக்கவும் செய்கிறது..
அதனால்தான், கடந்த வாரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்காக, தெற்கு ரயில்வேயுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. புதிய நிலையத்தை அமைக்க ரயில்வே பொதுமேலாளர் ஒப்புதலும் தந்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, இதற்கான செலவை முழுமையாக ஏற்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
3 நடைமேடைகள்: இப்படிப்பட்ட சூழலில் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.. கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போகிறதாம். கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள், இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ரயில் நிலைய பணிக்கு முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டிப்பு மகிழ்ச்சி: கிளாம்பாக்கம் ரயில்வே பணிகள் இப்போது துவங்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு இன்னும் தள்ளிப்போகக்கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.. இருந்தாலும், சென்னை மக்கள் எந்த அவதிக்கும் உள்ளாகாதவாறு, அனைத்து வடிகால்நீர் வசதி பணிகளும் முடிவடைந்து, திறக்கப்பட்டால், அது பொதுமக்களுக்கு மகிழ்ச்சிதான்..!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications