Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்பிட்டாரு கிருஷ்ணசாமி கிளாம்பாக்கத்துக்கு.. "2 நாள் சொன்னா பரவாயில்ல.. இது நல்லதில்ல".. ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு விஷயத்தில் அதிருப்தி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்லதல்ல என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான முக்கிய கோரிக்கையையும் அரசுக்கு விடுத்துள்ளார்.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தவாறே உள்ளன.

Kilambakkam Bus Stand and Kilambakkam Bus terminus matter soon solved, Dr krishnaswamy urges to TN Gov

பல மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பயணிகள் வாக்குவாதத்திலும் போராட்டங்களிலும் ஈடுபடும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் சொல்லும்போது, "நள்ளிரவு நேரத்தில் வருவோர் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்... கிளாம்பாக்கத்தில் போதிய பஸ்கள் இல்லை என்று செய்தி பரப்புகின்றனர். இப்படி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது.. போராட்டத்தில் உள்நோக்கம் இருக்கிறது" என்றார்.

எனினும், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கிளாம்பாக்கம் விஷயத்தை கையில் எடுத்துள்ளன.. அந்தவகையில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

கிருஷ்ணசாமி: இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "ளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏறக்குறைய 100 ஏக்கர் பரப்பளவில் சென்னை புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் என்ற பகுதியில் அண்மையில் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து இயங்கி வந்த அனைத்து அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பரந்துபட்ட சென்னையின் பல பகுதிகளிலிருந்து பயணிகள் கிளாம்பாக்கத்தை சென்றடைவதற்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு பகல் என்று பாராது அப்பேருந்து நிலையத்தை அடையும் பயணிகள் சென்னையில் தங்களுடைய இருப்பிடங்களுக்குச் செல்ல ஏதுவாகப் போதிய நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் இருந்தது. ஆனால், 40 நாட்களுக்குப் பிறகும், போதிய அளவு இணைப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுப் பெரிதும் உள்ளது.

மேலும், அப்பேருந்து நிலையத்தில் இன்னும் கழிப்பிட வசதிகள் மற்றும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு உண்டான இட வசதிகள் இல்லை என்ற புகார்கள் எழுந்தவண்ணம் இருப்பதோடு மட்டுமின்றி, அண்மைக்காலமாகப் பயணிகளே சாலை மறியலில் ஈடுபடக்கூடிய போக்குகளும் உருவாகி வருகின்றன. இந்த அதிருப்தி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்லதல்ல.

சென்னை: தொழில், வணிகம், வேலை வாய்ப்புகள் மற்றும் குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வந்து செல்கின்றனர்.

அனைவராலும் முன்பதிவு செய்து ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய இயலாது.. அது எல்லோராலும் சாத்தியமானதும் அல்ல. குடும்பம் குடும்பமாகப் பயணிக்கக் குழந்தைகளோடு இரவு நேரங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருபவர்கள் தொலைதூர மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் பல மணி நேரங்கள் காத்துக் கிடப்பது அவலத்திலும் அவலம்.

பிரச்சனைகள்: இரண்டொரு நாள் அல்லது ஓரிரு வாரம் என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால், பேருந்து நிலையம் திறந்து ஏறக்குறைய 40 நாட்கள் ஆகியும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணாதது ஏற்புடையதல்ல. போதிய இணைப்பு மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அதிகரிப்பதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வலியுறுத்துகிறேன்" என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+