கிளாம்பாக்கம் போறீங்களா? பஸ் ஸ்டாண்டில் என்ன நிக்குதுனு பாருங்க.. கிளாம்பாக்கத்தில் நுழைந்ததுமே குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினால், ஒருசில நடைமுறை சிக்கல் எழுந்துள்ளதாக சொல்கிறார்கள்.. அதேசமயம், தமிழக அரசும் பயணிகளுக்காக, ஒவ்வொரு வசதிகளையும் செய்து தந்தபடியே உள்ளனர்.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை கடந்த 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. இதையடுத்து, நேற்று முதல், இந்த பஸ் முனையம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது..

Kilambakkam Bus Stand and permanent 108 ambulance for emergency treatment kelambakkam bus station

பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்களை 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என சிஎம்டிஏ அறிவித்திருக்கிறது என்றாலும், ஒருசில நடைமுறை சிக்கல்களும், குழப்பங்களும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக புலம்பல்கள் வெடித்தன.

பஸ் ஸ்டாண்டு: முக்கியமாக, பயணிகள் பஸ் நிலையத்தில் இறங்கியதுமே, பேட்டரி கார் வசதி சேவை, அதிகாலை நேரங்களில் இல்லையாம்.. டீக்கடை, சாப்பாட்டுக்கும் சிக்கல் உள்ளது.. ஒரு சில உணவகங்களை தவிர பெரும்பாலான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை..

பஸ் ஸ்டாண்டிலுள்ள குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வரவில்லையாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டிருந்தாலும், அந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கு டம்ளர் வைக்கப்படவில்லையாம்.. இதனால் கைக்குழந்தைகள், வயதானவர்கள் அவதிக்கு ஆளாகும் நிலை உள்ளதாம். 108 ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை, தனியார் ஆம்புலன்ஸ் கட்டண சேவையாக உள்ளது என்றெல்லாம் இந்த 4 நாட்களாகவே மக்கள் குமுறி சொன்னார்கள்.

Kilambakkam Bus Stand and permanent 108 ambulance for emergency treatment kelambakkam bus station

அவசர சிகிச்சை: எனினும், இந்த குறைகளை கூடிய சீக்கிரம் களைவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்று உறுதி தரப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் பயணிகளின் அவசர சிகிச்சைக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் பெருத்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

அதேசமயம் இன்னொரு கோரிக்கையை விடுத்துள்ளனர்.. அதாவது, இந்த கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவர் ஆலோசனை, மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

கோரிக்கை: அதனால் முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.. அல்லது அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு தனியாகவே அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஏழை, எளியோர் குறைந்தவிலையில் உணவு சாப்பிடும் வகையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+