470 கிளாம்பாக்கத்தில் ரெடியா நிக்குது மக்களே.. சுதந்திர தினம் + தொடர் விடுமுறை.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தின விடுமுறை சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது..., அத்துடன், இப்பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது குறித்தும் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

பணிநிமித்தம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கமான ஒன்றுதான்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

Kilambakkam Bus Stand Special Buses independence day 2024 Gov buses

இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் இயல்பான விஷயமே. அந்தவகையில், தற்போது வாரவிடுமுறை ஆரம்பமாகி உள்ளது..

ஆடி மாதம்: தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக வரும் நிலையில், பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அதுவும் இல்லாமல் ஆடி மாதம் முழுவதுமே திருவிழா மாதமாக இருப்பதால், சொந்த ஊரில் கொடை விழா, கோவில் திருவிழா என்று பலரும் தங்களது பயணத்தை திட்டமிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சுதந்திர தினம் மற்றும், சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது... இதற்கான முன்பதிவும் நடந்து கொண்டிருப்பதால், சிறப்பு பேருந்துகள் குறித்த அறிக்கையை போக்குவரத்து துறை விடுத்துள்ளது.

கிளாம்பாக்கம்: "சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ஆகஸ்ட் 14ம் தேதி 470 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போன்று ஆகஸ்ட் 16,17 தேதிகளில் இந்த மாவட்டங்களுக்கு 365 பேருந்துகளும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர் போன்ற இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதே போன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 16, 17, 18 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

முன்பதிவு: ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும், www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் இந்த பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 16, 17, 18 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+