கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நின்ற "முருகன்.. கோயம்பேட்டை ஏன் உடனே மூடனீங்க? படக்குனு பார்த்த திமுக
சென்னை: திமுக அரசை தொடர்ந்து பாஜக விமர்சித்து வரும் நிலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மேட்டரையும் கையில் எடுத்துள்ளது.. அந்தவகையில், திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் விமர்சித்திருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொல்லும்போது, "திமுக அரசு தோல்வி அடைந்த அரசு என்பதை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக மூடியதற்கான காரணத்தை திமுக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

தினந்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் நிலையை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.. நாடாளுமன்றத்தில் தவறான தகவலை தெரிவிக்கிறீர்கள் என டி.ஆர்.பாலுவை சொன்ன ஒரே காரணத்துக்காக அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
யாத்திரை: இதுவரை தமிழகம் முழுவதும் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல், சுமூகமாக நடந்தது. ஆனால், சென்னையில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சில காரணங்களை கூறி அனுமதி மறுத்திருக்கின்றனர். அதற்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து, பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி பெற்றிருக்கிறோம்" என்றார்.
திமுக அரசை தொடர்ந்து பாஜக விமர்சித்து வருகிறது.. விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகளும் அதிகரித்தபடியே உள்ளன. இந்த விஷயத்தில் அதிமுகவையே ஓவர்டேக் செய்து, திமுகவை பாஜக விமர்சித்து வருகிறது.. திமுகவின் ஒவ்வொரு செயலையும் பூதாகரமாக்கி கொண்டிருக்கிறது.. அதை மக்களிடம் கேள்வியாக கேட்டு கொண்டு சென்று வருகிறது.
பயணிகள்: இப்படித்தான், தற்சமயம் கிளாம்பாக்கத்தை கையில் எடுத்துள்ளது.. கிளாம்பாக்கம் பஞ்சாயத்து ஒரு மாதத்துக்கு மேலாகவே நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆம்னி பஸ் தரப்பினரின் கோரிக்கைகள், பயணிகளின் அதிருப்திகள் போன்ற விவகாரங்களால், தமிழகமே அல்லோகல்லப்பட்டு கொண்டிருக்கிறது.
தற்போது, பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் போராட்டத்தையே நடத்தும்அளவுக்கும் சென்றுவிட்டார்கள். அதனால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கிளாம்பாக்கம் குறித்த கோரிக்கையை அரசுக்கு விடுத்து வருகிறார்கள்... மற்ற கட்சிகள் அறிக்கைகளை வெளியிட்டு வரும்நிலையில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது பாஜக மட்டும்தான். இது திமுக அரசுக்கு எரிச்சலையே ஏற்படுத்தி வருகிறது.
விடிவு - முடிவு: "திமுக அரசு தோல்வி அடைந்த அரசு என்பதை கிளாம்பாக்கம் விவகாரம் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தற்போது எல்.முருகனும் விமர்சித்திருப்பது, திமுக தரப்பில் மேலும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
ஏற்கனவே, பொதுக்கூட்டம் நடத்துவதில் போலீஸ் தரப்பில் அனுமதி மறுத்தது, ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப்பட்டது, அண்ணாமலையின் நடைபயணத்துக்கு அனுமதிக்காதது என பல்வேறு விஷயங்களில் பாஜகவினர் கொந்தளித்து போயிருக்கிறார்களாம்..
தீர்வு: இந்த நேரத்தில் கிளாம்பாக்கம் விவகாரத்தையும் சேர்த்துவைத்து பாஜகவினர் போராட்டம் நடத்தினால், அது திமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலை தந்துவிடும் என்றே தெரிகிறது. எனவே, கிளாம்பாக்கத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதற்கு முன்பாகவே, இந்த விவகாரத்துக்கு ஒரு "விடிவும், முடிவும்" கிடைக்கும் என்று நம்பப்படுகிறது..!!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications