கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை "தூக்கிய" அண்ணாமலை.. ஒரு பந்துகூட விடறது இல்ல.. மிஸ் பண்ணிட்டாரா எடப்பாடி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டையும் வாய்ப்பையும் எடப்பாடி பழனிசாமி கோட்டை விட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. அதிமுகவை முந்திக் கொண்டு, கிளாம்பாக்கத்துள்ளும் நுழைந்துவிட்டார் அண்ணாமலை.
கடந்த 2 வருட காலமாகவே, பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களையும், அவரது அரசியலையும் பார்த்தால் 2 விஷயங்கள் புலப்படும்.. ஒன்று, திமுகவை டேமேஜ் செய்வது.. மற்றொன்று, அதிமுகவை ஓவர்டேக் செய்வது.
அண்ணாமலை: மத்திய பாஜகவின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றவாறே, திமுக அரசு மீதான புகார்களையும் லிஸ்ட் போட்டு சொல்லி வருவது அண்ணாமலையின் ஸ்டைல்.. ஆனால், அதேசமயம், உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்ற கோஷத்தையும் மறக்காமல் பதிவு செய்து வருகிறார்.

அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க, பிரம்மாண்ட கட்சியை பொறுத்தவரை, திமுகவைவிட அதிக ஓட்டு வங்கியை பெற்றிருக்கும் கட்சியாகும்.. அப்படிப்பட்ட ஆலமர கட்சியை, பாஜகவால் சிறிதுகூட சாய்க்க முடியாது.. இது பாஜகவுக்கும் நன்றாக தெரியும்.
என்றாலும், "பிரதான எதிர்க்கட்சி நாங்கள்தான்" என்று சொல்வதன் மூலம், பாஜகவின் துணிச்சல் வெளிப்படுகிறதென்றும், அதேசமயம், திமுகவுக்கு இணையாக பாஜகவும் உள்ளது என்பது போன்ற தோற்றத்தை பதிவு செய்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.
திமுக வேகம்: மற்றொருபுறம் அதிமுக சோர்ந்து விட்டது, திமுகவின் வேகத்துக்கு அதிமுகவால் ஈடுகொடுக்க முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.. இதைதான் நயினார் நாகேந்திரன் அன்று அதிமுகவை நேரடியாகவே அட்டாக் செய்து பேசியதாக சொன்னார்கள். உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக தத்தளித்து கிடந்த நேரத்தைதான், தமிழக பாஜக மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டது. அதிமுக சறுக்கியது இங்குதான்.
பல்வேறு போராட்டங்களை திமுகவுக்கு எதிராக அண்ணாமலை முன்னெடுத்ததும், காரசார அறிக்கைகளை வெளியிட்டதும், அதிமுகவுக்கு சறுக்கலாகவே பார்க்கப்பட்டது. கூட்டணியிலிருந்ததால், தமிழக பாஜகவை பெரிதாக விமர்சிக்க முடியாமல் அதிமுகவில் ஒருவித தவிப்பு இருந்தபோதும், சிவி சண்முகம், ஜெயக்குமார் போன்ற சீனியர்கள் அவ்வப்போது, தமிழக பாஜகவை கடிந்து கொள்ளவே செய்தனர்.
சென்னை புயல்: அதேபோல, டிசம்பர் மாதம் சென்னையை புயல் தாக்கியபோதும், உடனடியாக தென் மாவட்டங்களை பெருமழை தாக்கியபோதும், மக்களின் அபிமானத்தை பெற அதிமுக தவறிவிட்டதாகவே சொன்னார்கள்.. சென்னையில் ஒருநாள் மட்டும் புயல் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு, போட்டோவுக்கும் போஸ் தந்துவிட்டு, மறுநாளே சேலத்துக்கு எதுக்காக எடப்பாடி பழனிசாமி சென்றார்? என்று ஓபிஎஸ் தரப்பிலிருந்தே கேள்விகள் எழுந்தன.
அந்தவகையில், திமுகவின் ஒவ்வொரு செயலையும் பூதாகரமாக்கி, தமிழக பாஜக ஸ்கோர் செய்வதுபோலவே, இதோ கிளாம்பாக்கம் விஷயத்திலும் அதிமுகவை முந்திக் கொண்டுள்ளது. "கிளாம்பாக்கத்தில் பொதுமக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், பெருமளவில் போராட்டம் வெடிக்கும்" என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்
கிளாம்பாக்கம்: இந்த கிளாம்பாக்கம் பஞ்சாயத்து ஒரு மாதத்துக்கு மேலாகவே நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆம்னி பஸ் தரப்பினரின் கோரிக்கைகள், பயணிகளின் அதிருப்திகள் போன்ற விவகாரங்களால், தமிழகமே அல்லோகல்லப்பட்டு கொண்டிருக்கிறது.
நேற்றிரவு பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் போராட்டத்தையே நடத்தியிருக்கிறார்கள்.. இந்நிலையில்தான், அதிமுகவை முந்திக் கொண்டு, கிளாம்பாக்கத்துக்கான போராட்டத்தை அறிவித்துள்ளார்.
எடப்பாடி : அந்த வகையில், வரப்போகும் தேர்தலில், திமுகவுடன் சேர்த்து பாஜகவையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கு எழுந்துள்ளது. எனவே, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்து, அறிக்கைகள், மாநாடுகள் மூலம் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற பொருமல் ரத்தத்தின் ரத்தங்களிடமிருந்து ஆதங்கமாக வெடித்து கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications