கிறுகிறு கிளாம்பாக்கம்.. இதென்ன புதுசா முளைச்சிருக்கு? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு? ஏங்கும் தென்சென்னை
சென்னை: கிளாம்பாக்க பஸ் ஸ்டாண்டு இழுபறியாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்னொரு புகார் கிளம்பியுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.. இது தொடர்பான விசாரணையும் சூடுபிடித்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு புகார் வெடித்து கிளம்பி உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டு அமைப்பதற்காக, 88 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டபோது, இந்திய தொல்லிய துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
சர்வே நம்பர்: காரணம், இதே பகுதியில் வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட, 16 ஏக்கர் நிலத்தை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்திய தொல்லியல் ஆய்வு துறையான ஏஎஸ்ஐ அறிவித்திருக்கிறது..
ஏனென்றால், கடந்த 1946ல் இந்த பகுதியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டபோது, பெருங்கற்கால கல்பதுகைகளும், கல்வட்டமும் இங்குள்ளதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, அந்த காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களில், இதுபோன்ற கல்பதுகை அடையாளங்கள் அமைக்கப்படுவது வழக்கமாம். அதனால்தான், இனிவரும் இந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புகார்கள்: ஆனால், தடை செய்யப்பட்ட இதே இடத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டிருக்கிறது. இதற்காக, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், இந்திய தொல்லியல் ஆய்வு துறையும் தடையின்மை சான்றும் வழங்கியிருக்கிறது. பள்ளம் தோண்டி மண் அள்ள தடை இருந்தும்கூட, 12 அடி ஆழம் வரை தோண்டி செம்மண் எடுத்து செல்லப்படுவதாக சிஎம்டிஏ உயரதிகாரிகளுக்கு புகார் வந்திருக்கிறது.
இந்த புகாரின் அடிப்படையில், நேற்றைய தினம் தொல்லியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து, தொல்லியல் ஆய்வு துறையின் சென்னை வட்டார கண்காணிப்பாளர் காளிமுத்து ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில், "தடை செய்யப்பட்ட இடத்தில் மண் எடுக்கப்பட்டது குறித்து, கள ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், யாருமே இங்கு மண் எடுத்தது என்பது தங்களுக்கு தெரியாது என்கிறார்கள். எனினும் இதுகுறித்து, சிஎம்டிஏவுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்" என்றார்.
விசாரணை: "இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையான ஏஎஸ்ஐ அதிகாரிகளுக்கு, இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவும் ஏற்கனவே உறுதி தந்துள்ள நிலையில், இந்த மண் அள்ளும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணையும் வலுவாகியிருக்கிறது.. அப்ப கிளாம்பாக்கம் வருமா? வராதா??












Click it and Unblock the Notifications