கிளாம்பாக்கத்தில் கால் வைக்க முடியல.. நெரிசல் வண்டலூர், புழுங்கும் பெருங்களத்தூர்.. டிராபிக் சென்னை
சென்னை: 4 நாள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால், புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த ஜனவரி 25ம் தேதி தைப்பூசம், மறுநாள் குடியரசு தினம் 26ம் தேதி, சனி, ஞாயிற்றுக்கிழமை என 4 நாட்கள் மொத்தமாக தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

இதையொட்டி, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், அந்த விடுமுறை நாட்களில், 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கின.. இதனால், விடுமுறைக்கு முன்பேயே ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்திருந்தார்கள்.. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்படிருந்தனர்.
கோயம்பேடு: இதையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமானார்கள்.. அந்தவகையில், சென்னையிலும் பெரும்பாலானோர் கிளம்பி சென்றார்கள்.. ஆனால், இங்கே கோயம்பேடு + கிளாம்பாக்கம் பஞ்சாயத்து வெடித்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்..
கிளாம்பாக்கத்திலிருந்துதான் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசு சொன்னதால், அதற்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், வெளியூர்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.. பிறகு மாநகரப் பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சொந்த ஊர் போய் சேர்ந்தனர்.
அரசு போக்குவரத்து கழகம்: இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று சென்னைக்கு திரும்பியதால், புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலையிலிருந்தே சென்னையை நோக்கி மக்கள்வரத் துவங்கிவிட்டனர்..
நேற்று திங்கள்கிழமை வேலைநாள் என்பதால், மறுபடியும் சென்னை திரும்புபவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், சென்னையை நோக்கி ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்களில் புறப்பட்டு வந்ததால், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர், பரனூர்சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கிளாம்பாக்கம்: அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், சொந்த வாகனங்கள் என அனைத்திலுமே ஏராளமானோர் சென்னை நோக்கி வந்தனர்.. இதனால், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது... குறிப்பாக, தனியார் பஸ்கள் அனைத்துமே கிளாம்பாக்கத்துக்கு மட்டும் இயக்கப்பட்டதால், வண்டலூர் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
வழக்கமாக, பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி பகுதி மக்கள் பயணிப்பதால், ஜிஎஸ்டி ரோடு தினமும் டிராப்பிக்கில் காணப்படும். ஆனால், விடுமுறை முடிந்து சென்னை திரும்பியவர்களும் இதில் சேர்ந்துகொண்டதால், அதிக அளவுக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. பலர் பொத்தேரியில் இறங்கி மின்சார ரயில்களில் ஏறி வீடு போய் சேர்ந்தனர். சிலர் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வந்து, அங்கிருந்து மாநகர இணைப்பு பஸ்களில் கிளம்பி சென்றனர்.
இயல்பு நிலை: இதுபோக, ஆட்டோக்கள், கார்கள், மாநகர பஸ்கள் என ஒட்டுமொத்த புறநகர் பகுதியுமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த மொத்த கூட்டத்தையும் போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. கடும் முயற்சி எடுத்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியதால், இயல்பு நிலை திரும்ப துவங்கி உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications