கிளாம்பாக்கத்தில் யாருங்க இது? இதுக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்டில் இப்படி கிடையாதே? வாயை பிளந்த வண்டலூர்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள் அங்கு நடைபெற்ற இசை, நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இந்த சிறப்பு ஏற்பாடுகளை வரவேற்று, பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை இன்று 14-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மாட்டுப்பொங்கல், நாளை மறுநாள் காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே சென்னைவாசிகள் தயாராகிவிட்டனர்.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர்.. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம் என்பதால், இந்த முறையும் தமிழக போக்குவரத்து துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.
பஸ்கள்: இதில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த வருடம் போல அல்லாமல், இந்த முறை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாகவும் பஸ்கள் அனைத்தும் தங்களது பகுதிகளுக்கு எளிதில் கிடைப்பதாகவும் பயணிகளும் கருத்து கூறியிருந்தனர்.. ஆனால், சென்னையில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்குதான் சிரமமாக இருப்பதால், பாதி பஸ்களை கோயம்பேட்டிலிருந்தும், பாதி பஸ்களை கிளாம்பாக்கத்திலிருந்தும் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்: இந்நிலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. மேலும், பயணிகள் இளைப்பாறுவதற்கு வசதியாக, மேடைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பஸ்ஸுக்காக காத்திருப்பவர்களை மகிழ்விக்கும் விதமாக, பாட்டு கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4 நாட்களுக்கு இந்த இசை கச்சேரி தொடர்ந்து நடைபெற்றது. கடைசி நாளான நேற்று, அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணித்த நிலையில், இசைக்கச்சேரியை ரசித்து கேட்டார்கள்.. இதுவரை எங்குமே இப்படியொரு நிகழ்வு நடத்தப்பட்டதில்லை. கிளாம்பாக்கத்தில்தான் முதல்முறையாக, பயணிகளுக்காக பாட்டுக்கச்சேரி நடந்துள்ளது..
முதல்முறை ஏற்பாடு: அதேபோல, அங்குள்ள பிளாட்பாரம்களின் அருகே, குழந்தைகள் விளையாடுவதற்கான சிறிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. இதையெல்லாம் பார்த்து பயணிகள் பூரித்து விட்டார்கள். தங்களுக்காக செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பான ஏற்பாடுகளை வரவேற்றுள்ளதுடன், தங்களுக்கு இதுவொரு புதுவித அனுபவமாக இருப்பதாகவும் சிலாகித்து கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications