Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் போராட்டம்.. நள்ளிரவில் பஸ்கள் குறைவாக தான் இருக்கும்.. முன்கூட்டியே வரனும்.. சிவசங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகளின் பாதுகாப்பு கருதி நள்ளிரவு நேரத்தில் பேருந்துகள் அதிகம் இருக்காது. இது இப்போது இல்லை. காலம் காலமாக இருப்பது தான். எனவே பயணிகள் தங்களுடைய பயணத்தை 12 மணிக்கு உள்ளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து துவக்குவதற்கு திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வார இறுதியிலும் நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு 585 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிகப்பட்டிருந்தது. ஆடி மாதம் முதல் ஞாயிறு, பௌர்ணமி மற்றும் விசேஷ நாளையொட்டி இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Kilambakkam Minister Sivasankar Government Bus

எனினும் கடந்த சனிக்கிழமை இரவு தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை என்று பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாற்று பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பயணிகள் போராட்ட சம்பவம் தொடர்பாக இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நள்ளிரவு 1.30 மணிக்கு வந்து பேருந்து கேட்டால் எப்படி?, மிக குறைவானவர்கள் தான் போராட்டம் செய்தார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு 2 பேர் மதுபோதையில் வந்து போராட்டம் செய்ய செய்தனர். ஒருசிலர் இப்படி செய்வது எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு தான் இந்த கூட்டம். 12 மணிக்கு மேல் செல்வதற்கு பஸ் இல்லாமல், ஓட்டுனர் இல்லாமல், நடத்துனர் இல்லாமல் பேருந்து கேட்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது.

நள்ளிரவு நேரத்தில் பேருந்துகள் அதிகம் இருக்காது. இது இப்போது இல்லை. காலம் காலமாக இருப்பது தான். நள்ளிரவு 12 மணியில் இருந்து 4 மணி வரை பயணிகளின் பாதுகாப்பு கருதி, பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மிக குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படும். அந்த நேரத்தில் விபத்து ஏற்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும்.

தற்போது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வருவதற்கு நேரம் ஆகுவதாக பயணிகள் சொல்வதனால், 12 மணி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் தங்களுடைய பயணத்தை 12 மணிக்கு உள்ளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு துவக்குவதற்கு திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கான பேருந்து சேவை எல்லா நேரத்திலும் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதால் தான் தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் பொங்கல், தீபாவளி பண்டிகை போல திருவிழா, முகூர்த்த நாட்களில் கூட இப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் விட தற்போது அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+