கிளாம்பாக்கத்தில் மாற்றம் வருது.. கும்பகோணம், விழுப்புரம் இனி ஈஸி.. ஆம்னிக்கு ரெடியாகுது முடிச்சூர்
சென்னை: கிளாம்பாக்கத்தில், ஆம்னி பஸ்களுக்கு பார்க்கிங் வசதி இல்லாத சூழலில், முடிச்சூரில் பஸ்களை நிறுத்த வசதிகள் செய்து தரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், கும்பகோணம் விழுப்புரத்துக்கு கிளாம்பாக்கத்திலிருந்து எப்போது பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்தும் தெரிவித்துள்ளார் அமைச்சர்.
தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.. ஆனால், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடம் இல்லை என ஆம்னி பஸ் சங்கம் தெரிவித்து வருகிறது.

ஆம்னி பஸ்: அரசு எச்சரித்தும்கூட, ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் செல்ல மறுத்ததால், ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இப்போதைதக்கு கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் இடங்கள் மட்டுமே இருப்பதால், ஆம்னி பஸ்களுக்கான பார்க்கிங் வசதியை அரசு செய்து தர முடிவு செய்துள்ளது.. இதன்காரணாக, முடிச்சூர் பக்கத்தில், புதிய ஆம்னி பஸ் ஸ்டாண்டு அமைக்க உள்ளதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுகுறித்து கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சங்கங்கள்: அமைச்சர் சொன்னபோது, "சில சங்கங்களின் பஸ்கள் மட்டும், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படவில்லை. வரும் காலங்களில், அவர்களும் கிளாம்பாக்கத்திலிருந்தே பஸ்களை இயக்குவார்கள்.. தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை, ஆம்னி பஸ்கள் இறக்கி விடக் கூடாது..
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, இனி ஆம்னி பஸ்களின் பயன்பாட்டுக்கு கிடையாது.. ஆம்னி பஸ் பயணிகள் பயன்பாட்டுக்காகவே, 1,400, ப்ரீபெய்டு ஆட்டோக்கள், 200 கால்டாக்சிகள், 300 பெருநிறுவன வாடகை வாகனங்கள் இயக்கப்படும்.. தற்போதுகூட 300 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முடிச்சூரில் ஆம்னி பஸ்களை நிறுத்தும் வசதியானது, மார்ச் மாத இறுதிக்குள் செய்து தரப்படும். கோயம்பேட்டில் 5,000 சதுர அடி வழங்கப்பட்ட நிலையில், இங்கு 7,000 சதுர அடி இடம் வழங்கப்பட்டுள்ளது..
கோயம்பேடு: பயணிகளுக்கும் கோயம்பேட்டை விட, கிளாம்பாக்கத்தில் கூடுதல் வசதிகள் இருக்கின்றன.. கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பஸ், தாம்பரத்துக்கு 10 நிமிடத்துக்கு ஒரு பஸ், சிறுசேரியில் இருந்து கூடுதல் பஸ் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையம், மக்கள் பயன்பாட்டுக்கும் வரத்துவங்கி விட்டது.
விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பஸ்களும் வரும் 30ம் தேதி, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். சில பஸ்கள் மட்டும், மாதவரம் பஸ் நிலையத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஈசிஆர் ரோடு: தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, உத்திரமேரூர், திண்டிவனம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லி வழியாக பெங்களூரு, வேலூர் செல்லும் பஸ்களும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்" என்றார்.


Click it and Unblock the Notifications
