பெருங்களத்தூருக்கு நற்செய்தி.. முடிச்சூரில் அதென்ன புதுஸ்ஸா? குத்தம்பாக்கத்தில் தமிழக அரசின் "மாஸ்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து, பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை அமைக்கும் பணிகள் குறித்து, அமைச்சர் சேகர்பாபு இன்று ஆலோசனை நடத்தினார்.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இன்னும் திறக்கப்படவில்லை.. இப்போதைக்கு திறக்கப்படும் சூழலும் இல்லை என்றே தெரிகிறது.. கட்டுமானப்பணிகள் மொத்ததும் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாரானபோதுதான், மழை நேரத்தில் பஸ் ஸ்டாண்டு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்துள்ளது.
மழைநீர்: அதாவது, தேசிய நெடுஞ்சாலையைவிட, இந்த பஸ் பஸ்டாண்டு, 2 அடி உயரத்துக்கு கீழே இருக்கிறது.. அதனால்தான், தேசிய நெடுஞ்சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர், இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து வந்து தேங்கி நின்றுவிடுகிறது. இதற்கு பிறகுதான், கால்வாய் அமைக்கும் பணி துரிதமாக ஆரம்பமாகி உள்ளது..

Kilambakkam Bus Terminus and Are the works of Perungalathur, Mudichur bus stand completed

கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள், இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ரயில் நிலைய பணிக்கு முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறியிருக்கின்றன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது... அப்போது, சேகர்பாபு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும கட்டிடத்தின் 5வது மாடியின் மேற்கு பகுதியில் HUDCO நிறுவனத்திடம் மாத வாடகைக்கு பெற்று நவீன வசதிகளுடன் புணரமைக்கப்பட்ட அலுவலக பகுதியினை திறந்து வைத்தார்.

புதிய அலுவலகம்: 100 அலுவலர்கள் பணிபுரியும் வகையில் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் நவீன அலுவலகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனைத்து அலுவலக பகுதிகளையும் புணரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்..

இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும ஆய்வு கூட்டரங்கில், கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.. அந்த பணிகளுடன் சேர்ந்து நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மீனாட்சிபுரம்: இந்த கூட்டத்தில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகள் நடந்தன. குறிப்பாக, அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல, முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைய உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

Kilambakkam Bus Terminus and Are the works of Perungalathur, Mudichur bus stand completed

குத்தம்பாக்கம்: பிறகு, குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் பேருந்து முனையத்தின் இதர பணிகளான மழைநீர் வடிகால் அமைப்பு, பேருந்து முனையத்தில் முழுவதும் குளிரூட்டப்படும் பணிகள் குறித்தும், சென்னை - பெங்களுர் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் அணுகு சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த பஸ் முனையத்தில் மாநகர பேருந்துகள் நிறுத்தம், புறநகர் பேருந்துகள் நிறுத்தம், பேருந்துகளை பராமரிப்பதற்கான பணிமனை, தனியார் பஸ்கள் நிறுத்தம், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின் நிலையம், மருத்துவ மையம், குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை, ஏடிஎம், பொருள் பாதுகாப்பு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையம், கடைகள் மற்றும் கழிவறைகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுவதைக் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+