கிளாம்பாக்கத்துக்கு ஹேப்பி.. சென்னை தாம்பரத்துக்கு குஷி.. கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் துரிதமாக நடந்து வரும்நிலையில், எப்போது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதுமான இணைப்பு வசதிகள் இல்லை என்றும், மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷ்ன் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கியுள்ளது.

Kilambakkam Bus Terminus and Do you know when Kilambakkam Railway Station opens Good news to Chennai People

இதையடுத்து, வண்டலூர் ஊரப்பாக்கம் இடையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில்வே ஸ்டேஷன் நிலையம் அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளும் ஜரூராக ஆரம்பமாகி உள்ளன.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளத்திற்கு மேல்மட்ட நடைபாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மேம்பாலம்: கேசிபிடி மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.. இதையடுத்து, புது ரயில்வே ஸ்டேஷன் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருகிறது.. இந்த ஸ்டேஷனில், 3 பிளாட்பார்ம்கள் அமைக்கப்பட்டு, புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையிலும் திட்டம் உள்ளதாம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துவார்கள் என்பதற்காக, எஸ்கிலேட்டர்கள், லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே ஸ்டேஷன்: சில நாட்களுக்கு முன்பு, சென்னை ரயில்வே கோட்ட பொது மேலாளர் ஆர்என் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் குறித்து அவர் சொன்னபோது, "கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே புதிதாக அமைய உள்ள ரயில் நிலைய பணிகள், அடுத்த 6 மாதங்களில் முடிவடையும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இப்போது, அப்பணிகள் வேகமெடுக்க துவங்கியிருக்கும் நிலையில், 10 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளதாக கூறுகிறார்கள். ரயில்வே தளத்தில் நடைமேடைகள் மற்றும் வடிகால் அமைக்கும் பணியை இப்போது தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளதாம்.. இந்த வருட இறுதிக்குள் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் முடிந்துவிடும் என்றும் தகவல்கள் கூறினாலும், அதற்கு முன்னதாகவே, பணிகள் முடியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

பிளாட்பாரம்: இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் 10 சதவீத பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

ஒரே ஒரு பிளாட்பார்ம் அமைக்க தற்போது முடிவு செய்துள்ளோம். அதன் இருபுறமும் ரயில்கள் நிறுத்தப்படும் வகையில் இருக்கும். அதனால், செங்கல்பட்டு மார்க்கம் செல்லும் ரயில்களும், தாம்பரம் செல்லும் ரயில்களும் இந்த ஒரு நடைமேடையை மட்டுமே பயன்படுத்தலாம்.

கட்டிடங்கள்: 12 பெட்டிகள் கொண்ட ரயில் செல்லும் வகையில் இந்த புதிய நடைமேடையானது கட்டப்படும். இதைத் தொடர்ந்து ரயில் நிலைய கட்டிடங்கள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், டிக்கெட் கவுன்ட்டர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகள் தொடங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்" என உறுதி தெரிவித்துள்ளார்.

இப்பணிகள் ஒருபக்கம் தீவிரமாகிவருவதால், புறநகர் ரயில்களுக்கான மவுசும் ஏறிவிட்டதாக கூறுகிறார்கள். வார நாட்களில் சராசரியாக 75 சதவீத அளவிற்கு பயணிகளின் வருகையானது, இப்போது 95 சதவீதமாக அதிகரித்துவிட்டதாம், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.. இதனிடையே, மெட்ரோ பணிகளும் நடந்து வருவதால், எப்படியும் 6 மாதத்துக்குள் கிளாம்பாக்கம் செல்வதற்கு இணைப்பு வசதிகள் அமலுக்கு வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+