கிளாம்பாக்கத்தில் ஷாக்.. திடீர்னு பஸ் ஸ்டாண்டில் "சிக்கிய" 5 பேர்.. பதறியடித்து காப்பாற்றிய ஆபீசர்ஸ்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. என்ன நடந்தது நேற்று?
சென்னைக்கு புது முனையம் கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது.. இதனை கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது.

வடிகால் பணிகள்: கடந்த வருடமே இந்த கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் திறக்கப்படும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அடிப்படை கட்டமைப்புகள் சரியாக செய்யாதது, கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்காதது, ஜிஎஸ்டி சாலையை கடக்க நடைமேம்பாலம் அமைக்காதது போன்ற சர்ச்சைகளும், சலசலப்புகளும் எழுந்தவாறே உள்ளன..
சுமார் 400 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு பேருந்துகள் மட்டும் கிளம்பி செல்வது உட்பட பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
நடைபாதை மேம்பாலம்: நடைமேம்பாலப்பணிகள் முடியவும் இன்னும் ஒருவருட காலம் ஆகும் என்கிறார்கள். புறநகரிலிருந்து சென்னை மாநகருக்கு செல்ல போதுமான பேருந்துகளும் இல்லை.
இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டில் உள்ள வசதிகள் குறைபாடு குறித்து பயணிகள் அவ்வப்போது புகார்களை தெரிவித்தும் வருகிறார்கள். நேற்றுகூட, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மயிலாப்பூர், மந்தைவெளி வழித்தடத்தில் 2 மணி நேரமாக பேருந்துகள் இல்லை என்பதால், பயணிகள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தது..
இதற்கு தமிழக அரசு விளக்கம் தந்ததுடன், சம்பந்தப்பட்ட நடத்துனர் பொதுமக்களிடம் பேசிய விதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்பதால், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்றாலும், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்த பரபரப்புகள் அடங்கவில்லை.
லிப்ட் பிரச்சனை: ஏற்கனவே, நகரும் படிக்கட்டுகள் முதல் நாளே பழுதாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது இன்னொரு சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து விரைவு பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்காக 2 சிறுவர்கள், ஒரு முதியவர் மற்றும் 2 பெண்கள் மின்தூக்கியில் (லிப்ட்) சென்றபோது திடீரென மின்சார கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், லிப்ட் பாதியிலேயே நின்றுவிடவும், லிப்ட்டுக்குள் இருந்த 5 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இதையடுத்து, அந்த பயணிகளை, அதிகாரிகளும், ஊழியர்களும் சுமார் அரை மணி நேரம் போராடி, பத்திரமாக மீட்டுள்ளனர்..
பரபரப்பு: இப்போதுதான், பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது.. அதற்குள் எப்படி லிப்ட் ரிப்பேர் ஆகும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.. லிப்ட் எதனால் பழுது ஏற்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த சம்பவம் தற்போது கிளாம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications