கிளாம்பாக்கத்துக்கு யோகம்.. பொத்தேரியில் விரைவில் ஆரம்பம்.. ஜிஎஸ்டி ரோடு பிஸி.. சென்னைவாசிகள் ஹேப்பி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதையடுத்து, பொத்தேரிக்கு மவுசு கூடிவருகிறது.. இப்போது இன்னொரு குட்நியூஸ் ஜிஎஸ்டி சாலைக்கு எழுந்துள்ளது.. என்ன காரணம்?
ரயில்வே துறைக்கு வருமானம் ஈட்டவேண்டுமானால், ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.. ஆனால், சமீபகாலமாகவே கட்டணம் உயர்த்தப்படவில்லை..

அதற்கு பதிலாக, ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், அதேசமயம் வருவாயையும் ஈட்டுவதற்காகு ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துவருகிறது... இதற்காக, தனியாருடன் இணைந்து சரக்கு ரயில் சேவையை அதிகரிப்பது, ரயில்வேயில் உள்ள காலி இடங்களை வணிக நோக்கில் வாடகைக்கு விடுவது போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், கட்டணமில்லா வருவாயும் கணிசமாக ஈட்டப்பட்டு வருகிறது.
உணவகம்: அந்த வகையில், காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டது.. இதற்காக, கடந்த வருடம் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் பொத்தேரி ஆகிய 3 ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைப்பது தொடர்பாக மின்னணு ஏலம் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இதற்காக 2 வருடத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஏலமும் முடிந்து, 3 நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க தனியாருக்கு ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.. இந்த உணவகம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் உறுதி தரப்பட்டிருந்தது.
உணவகம்: இதில், சென்ட்ரலில் உணவகம் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், பொத்தேரியில் ரயில் நிலையத்தை ஒட்டி புதியதாக ரயில் பெட்டி உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.1.5 கோடி செலவில் உருவான இந்த ரயில் பெட்டி உணவகத்துக்கு "ரூட் 32" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில், பழைய ரயில் பெட்டிக்கு புதுவண்ணம் தீட்டப்பட்ள்ளது.. , உள்பகுதியில் மரபலகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.. தென்னிந்திய வகைகள் மட்டுமின்றி, சைனீஸ், இத்தாலிய உணவு வகைகளும் இங்கு வழங்கப்பட உள்ளன. ஜிஎஸ்டி சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், ரயில் பயணிகள் என அனைவருக்குமே இந்த உணவகம் பயனளிக்க போகிறது..
சபாஷ்: அதுவும் இல்லாமல், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டு விட்டதால், பொத்தேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.. எனவே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் இந்த ரயில்வே ஹோட்டல் பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications