கிளாம்பாக்கம் கிளம்பிட்டீங்களா? கோயம்பேடு திரும்பிட்டீங்களா? தமிழக அரசு Vs ஆம்னி பஸ்கள்.. என்னாகுமோ
சென்னை: ஆம்னி பஸ்களை, இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதற்கு ஆம்னி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில காரணங்களையும் அவர்கள் முன்வைத்து வருவதால், பயணிகள் கதிகலங்கியும், குழம்பியும் போயிருக்கிறார்கள்.
சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு சந்தித்து வருகிறது.

ரயில்வே ஸ்டேஷன்: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லவும் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில்வே நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்குநடுவில், இன்று அதாவது, ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறும் சிக்கல்கள் இதுதான்:
பஸ் ஸ்டாண்டு: "கிளாம்பாக்கத்தில் மெட்ரோ இல்லை.. ரெயில் நிலையம் இல்லை.. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்களை இயக்குவதற்கு வசதி உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களை நிறுத்த இடமில்லை.
தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் விழாக் காலங்களில் 1200 பஸ்கள் வரை இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார்.
ஜிஎஸ்டி சாலை: ஜிஎஸ்டி சாலையை கடந்து, கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுகிறார்கள்.. இப்போது கிளாம்பாக்கத்துக்கு பொதுமக்கள் வர வேண்டுமானால், ஓலா, ஊபர், ஆட்டோ பயன்படுத்த ஆயிரம் ரூபாய் முதல் 1500 வரை செலவாகிறது.. ஜிஎஸ்டி சாலைக்கு எதிரே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி சாலையின் கடந்து பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல சிரமமாக இருக்கிறது.
முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். இன்று முதல்கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பயணிக்கும் 40% மக்கள் தாம்பரத்தைத் தாண்டி கிண்டி, அசோக் நகர், கோயம்பேடு வரக்கூடிய பயணிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வசதியையும் நாங்கள் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. மத்திய அரசுக்கு பணம் தருகின்ற ஏடிஎம் ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள்.. மாநகருக்குள் ஆம்னி பஸ்கள் வந்து செல்ல சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பும் எங்களிடம் இருக்கிறது.
ஆம்னி பஸ்கள்: கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களுக்காக 25 அலுவலக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் 1,000 பஸ்கள் வரும் நிலையில், 100 பஸ்கள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. முடிச்சூர் வரதராஜபுரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலையம் கட்டி முடிக்க 9 மாதங்களாகும். அதுவரை பஸ்களை எங்கே நிறுத்த முடியும்?
புதிய பஸ் ஸ்டாண்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இப்போதைய சூழலில், போதிய அடிப்படை வசதியில்லை.. செங்குன்றம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ்களின் பராமரிப்பை நாங்கள் மேற்கொண்டு வரும் சூழலில் இதுபோன்ற உத்தரவால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை உரிமையாளர்கள் சந்திக்க நேரிடும். காரணம், இதனை நம்பி 2 லட்சம் பேர் உள்ளனர். ...
கோயம்பேடு: பகுதியாக கிளாம்பாக்கத்துக்கு மாற அனுமதிக்க வேண்டும் எனறு முன்பே நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், உடனடியாக மாற வேண்டுமென உத்தரவிடுகின்றனர். ஆம்னி பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல தடையில்லை என சுப்ரீம்கோர்ட் உத்தரவுள்ளது.. அதனால், அனைத்து வசதிகளும் வரும் வரை கோயம்பேடில் இருந்துதான், ஆம்னி பஸ்கள் புறப்பட்டு கிளாம்பாக்கம் சென்று பயணியரை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்று நொந்து போய் சொல்கிறார்கள்.
ஆக, கிளாம்பாக்கத்தில் இருந்து கண்டிப்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அங்கு 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்று தெரிவிக்கின்றனர். இப்போது விஷயம் என்னவென்றால், இவர்களுக்கு நடுவில் பயணிகள் கதிகலங்கி போயிருக்கிறார்கள். ஆம்னி பஸ்களில் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
பயணிகள் குழப்பம்: ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து காத்து இருக்கின்ற நிலையில் பயணம் செய்ய கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications