பயன்பாட்டுக்கு வந்தது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. தென் மாவட்டங்களுக்கு சல்லுனு செல்லும் பஸ்கள்
சென்னை: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த நிலையில், தற்போது அதிகாலை முதலே தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2019 இல் புதிய பேருந்து நிலையம் கட்ட தொடங்கியது.

இது 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 88 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் திறப்பு விழா எப்போது எப்போது என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் டிராக்கிங், நவீன வசதிகள், மூன்று பாலினத்தவருக்குமான கழிப்பறைகள், பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக பிரெய்லி எழுத்துகள் என அத்தனை வசதியும் இந்த பேருந்து நிலையத்தில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நேற்று திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இன்று அதிகாலை முதலே மக்கள் கடுங்குளிரில் தென் மாவட்டங்களுக்கு செல்ல தயாராகி வந்துள்ளனர். இதனால் அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மக்கள் கூறுகையில், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் போது பயண நேரம் குறையும்.
அது போல் போக்குவரத்து நெரிசலின்றி விழாக்களின் போது எளிதாக பயணிக்கலாம். தாம்பரத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுவாக பண்டிகை காலங்களில் கோயம்பேட்டில் இடபற்றாக்குறை என்பதால் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
அப்படி பார்த்தால் தாம்பரத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். எனவே தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 91 ஆம் எண் கொண்ட பேருந்தில் ஏறினால் போதும். கிளாம்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு செல்ல 15 நிமிடங்களே ஆகும். இதனால் எங்குமே போக்குவரத்துக்காக நிற்காமல சல்லுனு ஊர்களுக்க போய்விடலாம்.
இனி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். செங்கல்பட்டில் போக்குவரத்து ஏற்பட்டாலும் தற்போது சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் எந்த பிரச்சினையும் இல்லை என பயணிகள் தெரிவித்தனர். பொங்கல் வரை தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
இதைத் தொடர்ந்து படிப்படியாக மேற்கு மாவட்டம், வடமாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படும். இதற்காக சென்னை சிட்டிக்கு வரத்தேவையில்லை, கோயம்பேடுக்கு வருவதற்கு பதில் பூந்தமல்லி பைபாஸில் 15 நிமிடங்களில் வந்துவிடலாம். எனவே இந்த பேருந்து நிலையம் மிகப் பெரிய பயன்களை தரும் என்பதில் சந்தேகமில்லை., ஆனால் அரசு தூய்மையாக வைத்துக் கொண்டாலும் பொதுமக்களும் தூய்மையாக வைத்திருத்தல் அவசியமாகும்.












Click it and Unblock the Notifications