கிளாம்பாக்கத்தில் இறங்க முடியல.. கை கொடுக்கும் "பொத்தேரி".. சென்னை மக்களுக்கு வந்த நல்ல சேதி பாருங்க
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து, தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடமே திறந்திருக்க வேண்டிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம், இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.. இந்த ஒரு வருட காலமாகவே சீரமைப்பு மற்றும் வடிகால் வசதி பணிகள் நடந்தன. ஆனாலும் முழுமையான வசதிகள் இன்னும் இந்த ஸ்டாண்டில் அமைக்கப்படவில்லை என்கிறார்கள்..

அடிப்படையான சில வசதிகளையும் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து எழுந்துவருகின்றன.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டில் இருந்தபோதே, காலை 7 மணிக்கு மேல் சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.. அது பீக் ஹவர் என்பதால், ஒரு சில பஸ்கள் மட்டும் உள்ளே வந்துசெல்லும்..
இணைப்பு போக்குவரத்து: ஆனால், இப்போது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே பயணிகள் இறங்கி, பஸ்கள் வழியாக மட்டுமே சென்னைக்குள் வர முடியும்.. அதனால்தான், இணைப்பு போக்குவரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷனை திறந்தபிறகு, பஸ் ஸ்டாண்டை திறந்திருக்கலாமே? இவ்வளவு சீக்கிரம் பஸ் முனையத்தை திறந்துவிட்டால், வடசென்னை உள்ளிட்டவர்கள் எப்படி கிளாம்பாக்கம வர முடியும்? மெட்ரோ வசதி இல்லாதவர்கள் எப்படி கிளாம்பாக்கம் வர முடியும்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
ரயில்வே ஸ்டேஷன்: கிளாம்பாக்கத்தில் இறங்கினால், பக்கத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல குறைந்தது ஒன்றரை கிலோமீட்டருக்கு போக வேண்டியிருக்கிறது.. கையில் மூட்டை முடிச்சுகள், குழந்தைகளுடன் அவ்வளவு தூரம் செல்லவும் முடிவதில்லை.. இதற்கு பொத்தேரியில் இறங்கி கொண்டால், பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன் உள்ளதால், பயணிகள் இதற்கு முக்கியத்துவம் தந்து வருகிறார்கள். ஆனால், ஒவ்வொருமுறையும் இப்படி பொத்தேரியில் இறங்கி செல்லவும் முடியாது.
அதனால்தான், ரயில்வே ஸ்டேஷனை உடனடியாக கிளாம்பாக்கத்தில் திறக்க வேண்டும் என்கிறார்கள்.. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. அதேபோல, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வரை 450 மீட்டர் தூரத்துக்கு ஸ்கைவாக் அமைக்கப்படும் என்று சொல்லி உள்ளதால், அந்த பணிகளும் நடந்து வருகின்றன.. இன்னொரு பக்கம் மெட்ரோ பணிகளும் நடந்து வருகிறது..
அமைச்சர் சிவசங்கர்: இப்படிப்பட்ட சூழலில், இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளாற்றில் ஏற்பட்ட மணல் குவாரி பிரச்சனை வழக்கு விசாரணைக்காக கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆஜர் ஆனார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அமைச்சர் சொன்னதாவது:
நம்பிக்கை: இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அரசு பேருந்துகளில் இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்தனர். தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் அரசுப் பேருந்தை நோக்கி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று உறுதி தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications