எடப்பாடி பக்கம் திரும்பும் டார்கெட்.. தப்பு அவர் மேலே? மூழ்கிய கிளாம்பாக்கம்.. விசாரிக்கும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திலிருந்து படிப்படியாக பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையே அங்கே வெள்ளம் ஏற்பட்டு உள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

 Kilambakkam Omni Bus Stand flood: Tamil Nadu government to investigate the issue against AIADMK

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை.

இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.

இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.

வெள்ளம்: இந்த நிலையில் நேற்று சென்னையில் பெய்த மழையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதேபோல் எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தி நுழைவு பகுதி மற்றும் உட்பகுதி நீரில் மூழ்கி உள்ளது.

விசாரணை; இந்த நிலையில் இந்த பேருந்து நிலைய கட்டுமானத்தில் விரைவில் விசாரணைகள் நடத்தப்படும். இதில் முறைகேடுகள் செய்யப்பட்டு இருக்கலாம். அதனால்தான் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் விரைவில் இந்த பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கினறன. முன்னாள் முதல்வர் எடப்பாடி, அப்போது டெண்டர் எடுத்தவர்கள் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

படிப்படியாக திறப்பு: இந்த நிலையில்தான் சீரமைப்பு பணிகளை முடித்த பின் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திலிருந்து படிப்படியாக பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

சிஎம்டிஏ அதிகாரிகள் முதலில் கிளாம்பாக்கத்தில் இருந்து தெற்குப் பகுதிக்குகளுக்கு பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள உள்ளனர். அதைத் தொடர்ந்து வேலூர் போன்ற மாநிலத்தின் வடக்குப் பகுதிகளுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அளித்து உள்ள பேட்டியில்"பஸ் சேவைகள் செயல்படத் தொடங்கினால்தான் அதில் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியும். இதை படிப்படியாகவே செய்ய வேண்டும். அப்போதுதான் செயல்பாட்டில் உள்ள பிரச்சனைகளை எங்களால் புரிந்து கொண்டு குறைகளை சரி செய்ய முடியும். . இதன்மூலம் பொதுமக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் என சிஎம்டிஏ அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்தார்.

முக்கியமாக முதல் கட்டமாக ஒரு சில ஆம்னி பேருந்துகளில் போர்ட் செய்யும் இடமாக இது செயல்படும். அதன்பின் இங்கே அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+