பொத்தேரி தாங்குது.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வந்த யோகம்.. தென்னக ரயில்வே சொன்ன ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதையடுத்து, தென்னக ரயில்வே ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.. என்ன காரணம்??

கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டு அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.. இப்போதைக்கு 10 சதவீத பணிகள் இதில் முடிந்துள்ளதாக கூறுகிறார்கள்.

Kilambakkam Railway Station and Happy news in chennai suburban train service due to Kilambakkam Bus Stand

அதேபோல, மெட்ரோ பணிகளும் நடந்து வருகிறது.. ஒருபக்கம் ரயில்வே ஸ்டேஷன், மறுபக்கம் ஸ்கைவாக், இன்னொருபக்கம் மெட்ரோ என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளாம்பாக்கம் ஏற்படுத்தி வருகிறது

வருமானம்: அதுமட்டுமல்ல, ரயில்வே துறைக்கு வருமானம் ஈட்டவேண்டுமானால், ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.. ஆனால், சமீபகாலமாகவே ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், வருவாயை மட்டும் ஈட்டுவதற்காக ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துவருகிறது... இதனிடையே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டு விட்டதால், பொத்தேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது..

இப்படிப்பட்ட சூழலில், தெற்கு ரயில்வே முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.. இந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே, 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறதாம்.. இது, கடந்த வருடத்தைவிட, கிட்டத்தட்ட 11 சதவீதம் சதவீதம் அதிகம் என்கிறது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

தெற்கு ரயில்வே: இந்த நிதியாண்டில் ஈட்டிய வருவாய் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது... அதன்படி, 2023 -24ம் நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாய் 12 ஆயிரத்து 20 கோடிகள் ஆகும்.. பயணிகள் பயணித்தது வாயிலாக, 7151 கோடி ரூபாயும், சரக்குகள் ஏற்றியது வாயிலாக, 3674 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், புதிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டதுதானாம்.. இதைத்தவிர, கடந்த ஜனவரி 2024க்கு பிறகு, சென்னை புறநகர் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து விட்டதாம்.

கிளாம்பாக்கம்: வார நாட்களில் சராசரியாக 75 சதவீத அளவிற்கு பயணிகளின் வருகையானது, இப்போது 95 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதும், இதற்கு மற்றொரு முக்கிய காரணம் என்கிறார்கள்.. ஏனென்றால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருப்பவர்கள், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு செல்ல வேண்டுமானால், இணைப்பு போக்குவரத்து அவ்வளவாக இல்லை.

மாநகர பஸ்களிலோ டிக்கெட் விலையோ 40, 30 ரூபாய் என்றிருப்பதால், சென்னைவாசிகள் புறநகர் ரயிலை நாடுகிறார்களாம். வெறும் 10 ரூபாயில் கிளாம்பாக்கம் வந்துவிட முடிகிறதாம். பொத்தேரியில் இறங்கி செல்வதால், புறநகர் ரயில்களுக்கான மவுசு இன்னும் ஏறிவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்..

ரயில்வே பணி:
அதுமட்டுமல்ல, இந்த வருட இறுதிக்குள் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் முடிந்துவிடும் என்பதால், பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+